Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்பை பயன்படுத்திய அஸ்வின்.. அதிக விக்கெட்கள் பட்டியலில் முன்னணி வீரரை முந்தினார்

ராஜ்கோட் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பலர் சாதனைகள் புரிந்தனர்.

சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இந்த போட்டியில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் ஆலன் டொனால்ட்-ஐ முந்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பலவீனமாக இருப்பதால், இந்தியா போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றியை இந்த போட்டியில் பதிவு செய்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

அஸ்வின் சாதனை

அஸ்வின் சாதனை

அஸ்வின் இந்த முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் 327 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். எளிய அணியான வெஸ்ட் இண்டீஸ் அடிய இந்த டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய அஸ்வின், முதல் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும் வீழ்த்தினார். இந்த போட்டியில் தன் நான்காவது விக்கெட்டை வீழ்த்திய போது அஸ்வின் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆலன் டொனால்ட் முந்தினார்.

ஆலன் டொனால்ட்-ஐ முந்தினார்

ஆலன் டொனால்ட்-ஐ முந்தினார்

ஆலன் டொனால்ட் தென்னாபிரிக்கா நாட்டை சேர்ந்த மிகச் சிறந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர். அவர் 72 டெஸ்ட் போட்டிகளில் 330 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அஸ்வின் தற்போது 63 டெஸ்ட் போட்டிகளில் 333 விக்கெட்கள் வீழ்த்தி இவரை முந்தி உள்ளார். ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 24வது இடத்தில் இருக்கிறார்.

4வது இடத்தில் அஸ்வின்

4வது இடத்தில் அஸ்வின்

மேலும், இந்திய அளவில் அஸ்வின் நான்காவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆவார். முதல் இடத்தில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களோடு இருக்கிறார். அடுத்த இடங்களில் கபில் தேவ் 434, ஹர்பஜன் 417 விக்கெட்கள் எடுத்து இடம் பெற்றுள்ளார்கள்.

சுழலில் ஏழாவது இடம்

சுழலில் ஏழாவது இடம்

சுழற் பந்துவீச்சாளர்கள் மத்தியில் அஸ்வின் ஏழாவது இடத்தில் இருக்கிறார். முத்தையா முரளிதரன் 800, ஷேன் வார்னே 7௦8, அனில் கும்ப்ளே 619, ரங்கனா ஹெராத் 430, ஹர்பஜன் 417, டேனியல் வெட்டோரி 362 விக்கெட்கள் வீழ்த்தி முதல் ஆறு இடங்களில் இருக்கிறார்கள். அஸ்வின் 333 விக்கெட்கள் வீழ்த்தி ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Saturday, October 6, 2018, 17:09 [IST]
Other articles published on Oct 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+