Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நம்ம பவுலர்களை குறை சொல்லவில்லை.. ஆனால் உண்மை.. ".. இந்திய அணி வீக்னஸ்-ஐ சொன்ன அஸ்வின்

ராஞ்சி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 249 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், "இந்திய அணியிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இல்லை" என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 249 ரன்கள் குவித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 252 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 501 ரன்களைக் குவித்தன.

Ravichandran Ashwin Warns Of India Bowling Crisis Dependence On Jasprit Bumrah T20I Loss

இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து தனது யூட்யூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், "நான் நடப்பு பந்துவீச்சாளர்களைக் குறை கூறவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், நம்மிடம் சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்கள் போதுமான அளவில் இல்லை. அத்தகைய பவுலர்களை கண்டறிந்து உருவாக்குவதில் நாம் போதிய கவனம் செலுத்தவே இல்லை.

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டன்களாக மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில் அவர்களிடம் ஜஸ்பிரித் பும்ரா என்ற மேஜிக் ஆயுதம் இருந்தது. பும்ராவால் ரன்களைக் கட்டுப்படுத்தவும் முடியும், விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். ஆனால் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் அந்தத் திறமை இருப்பதில்லை. பும்ரா இல்லாத நேரத்தில் நமது பந்துவீச்சு பலவீனமடைகிறது. இந்திய பந்துவீச்சின் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு உண்மையாகவே அச்சமாக இருக்கிறது.

ராஞ்சி போட்டியில் மயங்க் யாதவ் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, குல்தீப் யாதவை முன்கூட்டியே பந்துவீச அழைத்திருக்க வேண்டும். அதை விடுத்து பவர்பிளே முடிந்த உடனே சிவம் துபேவுக்கு பந்து கொடுத்தது தவறான முடிவாக அமைந்தது" என்று அஸ்வின் சுட்டிக்காட்டினார்.

"இனி இந்திய அணியில் ஆடாவிட்டாலும் நஷ்டமில்லை".. புவனேஸ்வர் தேர்வு பற்றி முகமது ஷமி ஓபன் டாக்

மேலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதான புவனேஸ்வர் குமாரை மீண்டும் அழைக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் இந்தியா 23 வேகப்பந்து வீச்சாளர்களைப் பரிசோதித்தும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்கைத் தவிர வேறு யாரும் 20 போட்டிகளுக்கு மேல் ஆடவில்லை. பும்ராவை மட்டுமே நம்பியிருக்காமல் புதிய பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும் என அஸ்வின் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

Story first published: Saturday, October 10, 2026, 21:31 [IST]
Other articles published on Oct 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+