For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தப்போகும் ஆயுதம் அஸ்வின்.. கங்குலி கருத்து

By Veera Kumar

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடிய சவுரவ் கங்குலி தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக ஆடிவருகிறது. இருப்பினும் அந்த அணியை வீழ்த்த கூடிய திறமை இந்திய அணிக்கு உள்ளது.

துருப்பு சீட்டு

துருப்பு சீட்டு

இந்த தொடரில், அஸ்வின் பந்து வீச்சு இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரும் துருப்பு சீட்டாக இருக்கும். சுழற்பந்து வீச்சில் அவர் முக்கியமான வீரர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

விராட் கோஹ்லி மற்றும், அனில் கும்ளே ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

முத்தரப்பில் கலக்கல்

முத்தரப்பில் கலக்கல்

மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் அந்த நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பைனல் வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தென் ஆப்பிரிக்கா 3வது இடத்தைதான் பிடித்தது.

டி20 வெற்றியாளர்

டி20 வெற்றியாளர்

டி20 உலக கோப்பையை சமீபத்தில்தான் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. அடுத்தடுத்த வெற்றிகளால் அந்த அணி மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 9, 2016, 11:40 [IST]
Other articles published on Jul 9, 2016
English summary
Former India captain Sourav Ganguly, on Friday, said off-spinner Ravichandran Ashwin would be the key to India's chances during the Test tour of the West Indies, their first under new head coach Anil Kumble.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+