Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க ஆச்சு ஐபிஎல் வீரர்களுக்கு... 4வது வீரரா தொடர்ல இருந்து விலகியிருக்காரு ஆர் அஸ்வின்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கடந்த 5 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.

Recommended Video

கொரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்.. IPL-ல் இருந்து Ashwin திடீர் விலகல்

சிறப்பான பௌலிங்கை அவர் போட்டுவரும் நிலையிலும் அவரால் விக்கெட்டுகள் எதையும் இதுவரை எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அவர் தன்னுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

5 போட்டிகளில் அஸ்வின் போட்டி

5 போட்டிகளில் அஸ்வின் போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கடந்த ஆண்டு முதல் இணைந்து விளையாடி வருகிறார் தமிழக வீரர் ஆர் அஸ்வின். இதனிடையே இந்த சீசனிலும் அவர் கடந்த 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். விக்கெட்டுகள் எதையும் அவர் எடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய பௌலிங்கை சிறப்பாகவே செய்து வருகிறார்.

அஸ்வின் கவலை

அஸ்வின் கவலை

இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவது குறித்து அஸ்வின் முன்னதாக தன்னுடைய கவலையை தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஐபிஎல்லில் இருந்து விலகல்

ஐபிஎல்லில் இருந்து விலகல்

இதனிடையே, நேற்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளார். இன்று முதல் அவர் ஐபிஎல்லின் இந்த சீசனிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

குடும்பத்திற்கு ஆதரவு

குடும்பத்திற்கு ஆதரவு

கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் இந்த சூழலில் தன்னுடைய குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்களுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து தெரிவித்துள்ள அஸ்வின், எல்லாம் சரியாக போகும்பட்சத்தில் மீண்டும் அணியில் இணைவேன் என்றும் கூறியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அறிவிப்பு

டெல்லி கேபிடல்ஸ் அறிவிப்பு

இந்நிலையில், அவருடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருப்போம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி தெரிவித்துள்ளது. ஐபிஎல்லின் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை உள்ளிட்ட வீரர்கள் இடையிலேயே விலகியுள்ள நிலையில் தற்போது அஸ்வினும் அந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 26, 2021, 15:01 [IST]
Other articles published on Apr 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+