For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL தொடரில் ஜடேஜா புதிய சாதனை.. தரமான ஆல்ரவுன்டர் என நிரூபனம்.. முதல் வீரர் என்ற பெருமை

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜடேஜா தாம் ஒரு ராக் ஸ்டார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். முதல் குவாலிபையர் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 2 ஓவர் முடிவில் 172 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் பேட்டிங்கில் தனது பங்களிப்பை காட்டிய ஜடேஜா 16 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும்.

Ravindra Jadeja acheived biggest milestone in ipl history

இதில் ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 137 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசும் போது பவர்பிளேவில் 41 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஜடேஜா கையில் பந்து வந்த உடன் , குஜராத் வீரர்களுக்கு அவர் தண்ணீர் காட்டினார்.

குறிப்பாக இரண்டு சிக்சர்களை தொடர்ந்து விளாசி ஷனாகா, சிஎஸ்கே ரசிகர்களுக்கு பயம் காட்டினார். எனினும் ஜடேஜா, சிறப்பாக பந்துவீசி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று அதிரடி வீரர் டேவிட் மில்லரையும் ஜடேஜா கிளீன் போல்ட் ஆக்கினார்.

இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஜடேஜா 150 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றார். இதே போன்று, ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரர் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு பிராவோ, சுனில் நரைன் மற்றுமே இந்த மைல்கலலை எட்டியுள்னர்.

Story first published: Tuesday, May 23, 2023, 23:06 [IST]
Other articles published on May 23, 2023
English summary
Ravindra Jadeja acheived biggest milestone in ipl history IPL தொடரில் ஜடேஜா புதிய சாதனை.. தரமான ஆல்ரவுன்டர் என நிரூபனம்.. முதல் வீரர் என்ற பெருமை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+