"பேட்டிங் இப்படி தான் பண்ணணும் தம்பி" - ஆஸி.யின் ஆடுகள குற்றச்சாட்டு.. தவிடு பொடியாக்கிய 2 வீரர்கள்
நாக்பூர் : ஆஸ்திரேலியா அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன் இருப்பதால் அவர்கள் திணறும் வகையில் ஆடுகளம் மாற்றப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியா மீது குற்றச்சாட்டை வைத்தது.
ஆடுகளம் தயாரித்த பிறகு இடது கை பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ளும் இடத்தில் மட்டும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை கடினமாக பராமரிப்பாளர்கள் மாற்றியதாக புகார் எழுந்தது.
இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் பந்து வீசினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் திணறுவார்கள் என கணிக்கப்பட்டது.

2 இடதுகை பேட்ஸ்மேன்கள்
ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் செய்யவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை தவிடு பொடி ஆக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி இந்திய அணியிலும் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். அதுவும் அதில் இரண்டு பேருமே ஆல் ரவுண்டர்கள்.

ஜடேஜா அபாரம்
இதில் ஜடேஜா டெஸ்ட் பேட்டிங்கில் அனுபவம் உடையவராக இருந்தாலும் அக்சர் பட்டேல் இப்போதுதான் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் காட்டிலும் இந்த இரண்டு பேரும் சிறப்பாக கையாண்டு பதிலடி கொடுத்தார்கள். குறிப்பாக ஜடேஜா 170 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.இதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும்.

அக்சர் அரைசதம்
மறுபுறம் சிறப்பாக விளையாடிய அக்சர்பட்டேல் 102 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார். இதில் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆஸ்திரேலியாவின் கூற்றுப்படி இவ்விருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் தான். இந்தியா ஆடுகளத்தை இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் வகையில் உருவாக்கி இருந்தால் இவ்விருவரும் எப்படி அரை சதம் அடித்திருக்க முடியும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பிய வருகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி
அப்படி இந்தியா ஆடுகளத்தை நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைத்திருந்தாலும் இந்த இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் ரன்களை சேர்த்தது எப்படி என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தங்களுடைய பேட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications