Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒருநாள் அணியில் இருந்து 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. உலகக்கோப்பையில் ஆட வாய்ப்பே இல்லை!

மும்பை: நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அணியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாகக் நீக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடருக்கு முன்னணி வீரர்கள் தயாராவதற்கு வசதியாக, இந்த ஒருநாள் அணி முதல் 3 போட்டிகள் மற்றும் கடைசி 2 போட்டிகள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தொடர்ந்து ஃபார்மின்றி தவித்து வரும் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளது, அவரது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் 2027 உலகக் கோப்பை கனவுக்கும் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு மாற்று வீரராக அக்‌சர் படேல் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல் நல்ல ஃபார்மில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு அணிகளிலുமே தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் நீக்கப்பட்டு, இஷான் கிஷன் மீண்டும் ஒருநாள் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

Ravindra Jadeja and Yashasvi Jaiswal Dropped from India s ODI Squad for New Zealand Series

கவுகாத்தியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 84 ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி முதல் 3 போட்டிகளில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்காத நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஒருநாள் தொடர் முடிந்த வெறும் 4 நாள்களிலேயே டெஸ்ட் தொடர் தொடங்குவதால், முதல் 3 போட்டிகளுக்குப் பிறகு கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுல், பிரசித் கிருஷ்ணா மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் டெஸ்ட் பயிற்சிக்குச் சென்று விடுவார்கள். இதனால் கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், இஷான் கிஷன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கடைசி கட்டப் போட்டிகளில் திலக் வர்மா, குமார் குஷாக்ரா, யாஷ் தாக்கூர் மற்றும் ஆகிப் நபி ஆகியோர் அணியில் இடம்பெறுவர்.

ரோஹித்துடன் 3 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே பதவி விலகல்

ரோஹித்துடன் 3 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே பதவி விலகல்

முதல் 3 போட்டிகளுக்கான ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

கடைசி 2 போட்டிகளுக்கான ஒருநாள் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், ஆகிப், குர்னூர், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், யஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.

Story first published: Saturday, October 17, 2026, 19:51 [IST]
Other articles published on Oct 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+