Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்னசை நிரூபிச்சுட்டாரு... குவான்டைனையும் முடிச்சுட்டாரு... களத்துல மோத தயாராகும் சிஎஸ்கே சூறாவளி!

மும்பை : சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த வாரத்தில் தன்னுடைய பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய குவாரன்டைனையும் முடித்துவிட்டு இன்று முதல் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளார்.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையில் ஜடேஜாவிற்கு இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கட்டைவிரலில் காயம்

கட்டைவிரலில் காயம்

இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்ககு கடந்த ஆஸ்திரேலிய தொடரின் இடையில் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு 6 வாரங்களுக்கு அவர் தொடர்ந்து என்சிஏவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

பிட்னசை நிரூபித்த ஆல்-ரவுண்டர்

பிட்னசை நிரூபித்த ஆல்-ரவுண்டர்

இதனிடையே, கடந்த மாதத்தில் அவர் அவ்வப்போது பயிற்சிகளில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். இதையடுத்து அவர் ஐபிஎல்லில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் தனது பிட்னசை நிரூபித்து என்சிஏவில் இருந்து வெளியில் வந்தார்.

7 நாள் குவாரன்டைன்

7 நாள் குவாரன்டைன்

இதையடுத்து சிஎஸ்கேவில் அவர் இணைந்தார். இதை சிஎஸ்கேவும் உறுதிப்படுத்தியது. தொடர்ந்து அவர் 7 நாட்கள் குவாரன்டைனிலும் ஈடுபட்டு, இன்று அதை முடித்துள்ளார். மேலும் அணியின் பயிற்சி முகாம்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

வெளியிட்ட சிஎஸ்கே

இந்நிலையில் ஜடேஜா மற்றும் ரெய்னா இருவரும் அணியின் ஜெர்சியை போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் இருவரும் உற்சாகமாக சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கின்றனர்.

Story first published: Thursday, April 1, 2021, 19:02 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+