Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிளம்புங்கடா மும்பைக்கு.. இந்தா வந்துட்டாருல்ல "சூறாவளி".. அடித்து நொறுக்கும் சிஎஸ்கே!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரையொட்டி தனது பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்றியுள்ளது சிஎஸ்கே. வீரர்கள் அனைவரும் மும்பை சென்றுள்ளனர்.

அணியில் புஜாரா, ரெய்னா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். ரவீந்திர ஜடேஜா இணைவது குறித்து எந்த தெளிவும் இல்லை என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் என்சிஏவில் இருந்து கிளியரிங் சான்றிதழ் வாங்கியுள்ளதை அடுத்து இன்று முதல் அவரும் அணியில் இணையவுள்ளதாக காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களில் துவக்கம்

சில தினங்களில் துவக்கம்

ஐபிஎல் 2021 போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபிக்கு எதிராகவும் இரண்டாவது போட்டி மும்பையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலும் நடைபெறவுள்ளது.

மும்பைக்கு மாற்றம்

மும்பைக்கு மாற்றம்

இதையொட்டி சிஎஸ்கே தற்போது தனது பயிற்சி முகாமை சென்னையிலிருந்து மும்பைக்கு மாற்றியுள்ளது. ஹோம் அட்வான்டேஜ் இல்லாததும் இந்த மாற்றத்திற்கு காரணம். இதையொட்டி நாளை மறுதினம் முதல் மும்பையில் தனது பயிற்சிகளை மீண்டும் துவக்கவுள்ளது சிஎஸ்கே.

தெளிவில்லை என ஆதங்கம்

தெளிவில்லை என ஆதங்கம்

முன்னதாக குவாரன்டைனிலும் அணிவீரர்கள் ஈடுபட உள்ளனர். இதையொட்டி அணி வீரர்கள் அம்பத்தி ராயுடு, தோனி, ருதுராஜ் ஆகியோரும் புஜாரா, ரெய்னா உள்ளிட்டோரும் மும்பை சென்றுள்ளனர். இதனிடையே அணியில் ரவீந்திர ஜடேஜா இணைவது குறித்த தெளிவில்லை என்று இரு தினங்களுக்கு முன்பு அதன் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

சிஎஸ்கேவில் இன்று இணைகிறார்

சிஎஸ்கேவில் இன்று இணைகிறார்

இந்நிலையில் என்சிஏவில் தனது பிட்னஸ் சான்றிதழை ஜடேஜா பெற்றுள்ளதாகவும், இன்றைய தினம் அவர் மும்பையில் சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதாகவும் காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடதுகை கட்டைவிரல் காயம்பட்ட ஜடேஜா, இரு மாதங்களாக என்சிஏவில் பயிற்சி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 26, 2021, 15:30 [IST]
Other articles published on Mar 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+