Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது எப்படி இருக்கு? கோலி, ரோஹித்தை எல்லாம் அடிச்சு தூக்கிய அந்த வீரர்.. டெஸ்ட் அரங்கில் நம்பர் 1!

மெல்போர்ன் : விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட பேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார் ஜடேஜா.

இந்திய டெஸ்ட் அணியில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை பெற்று வியக்க வைத்துள்ளார்.

2018 முதல் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரை அடுத்து புஜாரா, ரஹானே உள்ளனர். கடந்த இரு ஆண்டுகளில் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக வளர்ச்சி அடைந்தனர்.

அனைவரையும் விட அதிகம்

அனைவரையும் விட அதிகம்

ஆனால், இவர்கள் அனைவரையும் விட அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ளார் ஆல்-ரவுண்டர் ஜடேஜா. 2018 முதல் 2020 வரை இந்திய வீரர்களின் சராசரியை வைத்து எடுக்கப்பட்ட பட்டியலில் அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

ஜடேஜா 20 இன்னிங்க்ஸ்களில் 743 ரன்கள் குவித்து உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 57.15 ஆகும். ஒரு சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 14 இன்னிங்க்ஸ்களில் 740 ரன்கள் எடுத்து 56.92 சராசரி வைத்துள்ளார்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

விராட் கோலி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அவர் 41 இன்னிங்க்ஸ்களில் 2050 ரன்கள் குவித்து 52.56 சராசரி வைத்துள்ளார். மயங்க் அகர்வால் 50.00, ரஹானே 41.38 சராசரியுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

மாற்றம்

மாற்றம்

இப்படி முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் விட அதிக சராசரியுடன் முதல் இடத்தில் இருக்கிறார் ஜடேஜா. அவர் துவக்கத்தில் சுமாரான பேட்ஸ்மேன் ஆக கருதப்பட்டார். ஆனால், 2018 முதல் அவர் பேட்டிங் அதிரடியாக மாறியது.

தனி பயிற்சி

தனி பயிற்சி

2018 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிற்கு தனி பயிற்சி செய்த ஜடேஜா, அப்போது முதல் பந்துவீச்சுக்கு இணையாக தன் பேட்டிங்கையும் முன்னேற்றி இருக்கிறார். அதன் பின் தான் 2019 உலகக்கோப்பை தொடரில் மறக்க முடியாத ஆட்டம் ஆடினார்.

Story first published: Monday, December 28, 2020, 12:47 [IST]
Other articles published on Dec 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+