Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜட்டு சூப்பர்மேன்தான்... என்னமா பறந்து பறந்து கேட்ச் புடிக்கறாரு... துவக்க வீரர் ஆதங்கம்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வெற்றி கொண்டுள்ளது.

Recommended Video

CSK MASTERCLASS | A dominating bowling,Fielding performance by CSK | Oneindia Tamil

நேற்றைய போட்டியில் தவக்க வீரர்களாக களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள் டூ பிளசிஸ் 56 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களும் அடித்திருந்தனர்.

மேலும் நேற்றைய போட்டியில் 18வது ஓவரின்போது மணீஷ் பாண்டேவின் கேட்ச்சை சிறப்பான வகையில் பிடித்து டூ பிளசிஸ் அவுட் செய்திருந்தார்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 172 ரன்கள் இலக்கை சிஎஸ்கேவிற்கு அளித்த போதிலும் அதை சிஎஸ்கே வீரர்கள் எளிதாக கடந்தனர்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

அணியின துவக்க வீரர்கள் டூ பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் முறையே 56 மற்றும் 75 ரன்களை குவித்து பார்ட்னர்ஷிப்பில் 129 ரன்களை அடித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டு வருவதாக அணியின் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் அளிக்கிறது

ஏமாற்றம் அளிக்கிறது

தற்போது அணியில் சிறப்பான பேலன்ஸ் காணப்படுவதாகவும் மிகவும் ஆழமான பேட்டிங் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும் மணீஷ் பாண்டேவின் கேட்சை தான் பிடித்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான கேட்ச்களை பிடிக்க முடியாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

சூப்பர்மேன் ஜடேஜா

சூப்பர்மேன் ஜடேஜா

ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடுவதாகவும் அதிக கேட்ச்களை பிடித்து சூப்பர் மேனாக திகழ்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் குறைந்தபட்சம் தான் ஒரு கேட்ச்சையாவது பிடித்தது குறித்து மகிழ்ச்சி என்றும் பிளசிஸ் கூறியுள்ளார்.

சிறப்பான டூ பிளசிஸ்

சிறப்பான டூ பிளசிஸ்

இந்த தொடரில் தொடர்ந்து தனது 3வது அரைசதத்தை டூ பிளசிஸ் நேற்றைய போட்டியில் அடித்துள்ளார். இதன்மூலம் 6 போட்டிகளில் விளையாடி 270 ரன்களை குவித்துள்ள அவர், ஆரஞ்ச் கேப்பிற்கான ஓட்டத்தில் முன்னணியில் உள்ளார். இந்நிலையில் அணியில் மட்டுமின்றி தன்னுடைய பேட்டிங்கிலும் இந்த சீசனில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 29, 2021, 23:56 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+