Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா என்ன ரிட்டயர் ஆயிட்டாரா? ஏன் இப்படி ஒதுக்கி வைக்கிறீங்க? ஸ்ரீகாந்த் கேள்வி

மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில், மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை பரிசீலிக்குமாறு முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். 37 வயதான ஜடேஜா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த இரண்டு ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட உள்நாட்டு ஒருநாள் தொடரில் ஜடேஜா விக்கெட் ஏதுமின்றி, 6-க்கும் அதிகமான ரன் விகிதத்தைக் கொடுத்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஜடேஜா விளங்கியுள்ள நிலையில், அவர் திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ravindra Jadeja

அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் ஜடேஜாவின் முக்கியத்துவம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "ரவீந்திர ஜடேஜா ஏன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. 2023 உலகக் கோப்பையில் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டார். அவர் ஒரு silent killer. அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும், அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதே இல்லை.

வைபவ் சூர்யவன்ஷி ஆல்ரவுண்டராக மாற திட்டம்? இந்திய அணி பயிற்சியாளர் விளக்கம்

வைபவ் சூர்யவன்ஷி ஆல்ரவுண்டராக மாற திட்டம்? இந்திய அணி பயிற்சியாளர் விளக்கம்

டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அரிதாகவே விளையாடுகிறார், ஆனால் விளையாடும் போதெல்லாம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், அவர் உலகக் கோப்பை திட்டங்களிலும், அணியிலும் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று நான் இன்னும் நம்புகிறேன்" என்றார்.

"உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மொத்தம் மூன்று ஸ்பின்னர்கள் தேவைப்படுவார்கள். அதில் இருவர் ஆடும் லெவனிலும், ஒருவர் மாற்று வீரராகவும் இருக்க வேண்டும். அக்சர் படேல் ஒருவராக இருப்பார், குல்தீப் யாதவ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவரை நான் தேர்வு செய்வேன். மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் போட்டியை வென்று கொடுக்கும் திறன் கொண்டவர்கள். மூன்றாவது ஸ்பின்னரை நாம் பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

எனக்கா இந்திய அணியில் இடமில்லை.. இங்கிலாந்து மண்ணில் கலக்கிய குல்தீப் யாதவ்

எனக்கா இந்திய அணியில் இடமில்லை.. இங்கிலாந்து மண்ணில் கலக்கிய குல்தீப் யாதவ்

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்-பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக முக்கிய பங்கு வகித்த ஜடேஜா, 11 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 120 ரன்களையும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 25, 2026, 12:16 [IST]
Other articles published on Jul 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+