Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ஜடேஜா விரிசல் உறுதி.. மறைமுகமாக தோனியை தாக்கி பதிவு.. சிஎஸ்கேவில் இது தான் நடந்து இருக்குமோ?

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜாவுக்கும் கேப்டன் தோனிக்கும் விரிசல் ஏற்பட்டிருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

ஜடேஜா அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் உள்ள சிஎஸ்கே தொடர்பான பதிவுகளை அதிரடியாக நீக்கினார்.

இது குறித்து விளக்கம் அளித்த சிஎஸ்கே தங்களுக்கும் ஜடேஜாவுக்கும் எவ்வித விரிசலும் இல்லை என்று கூறியது.

பிரச்சினை என்ன?

பிரச்சினை என்ன?

ஜடேஜா தொடர்ந்து அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று அறிவித்தது. சிஎஸ்கே அணியின் கேப்டன் என்ற பொறுப்பை ஏற்று ஜடேஜா பணியாற்றினார். ஆனால் அவருக்கு கேப்டனாக பணியாற்ற முழு சுதந்திரம் தோனி வழங்காததால் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் தோல்வியை தழுவியது.

தோனி விமர்சனம்

தோனி விமர்சனம்

ஒரு கட்டத்தில் ஜடேஜாவின் சொதப்பல் கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம் என்றும் அவருக்கு எப்படி கேப்டன் பதவியை பணியாற்றுவது என்பது குறித்து ஊட்டி விட முடியாது என்று தோனி கூறினார். இது ஜடேஜாவுக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து காயம் ஏற்பட்டதாக கூறி ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு சீசனில் இருந்து ஜடேஜா பாதியில் விலகினார்.

ஜடேஜா அபாரம்

ஜடேஜா அபாரம்

அந்த சீசனில் ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் மோசமாக செயல்பட்டார். இந்த நிலையில் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்டில் சதம் விளாசினார். இதேபோன்று டி20 ஒருநாள் தொடரிலும் இந்திய அணி துணை கேப்டனாக அபாரமாக செயல்பட்டார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார் .

ஜடேஜா இன்ஸ்டா ஸ்டோரி

ஜடேஜா இன்ஸ்டா ஸ்டோரி

அதில் யாருக்காகவும் எதற்காகவும் உங்களுடைய தகுதியை குறைத்துக் கொள்ளாதீர்கள். சுயமரியாதை தான் அனைத்துமே என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் ஜடேஜாவிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், இதனால் தான் ஜடேஜா கடுப்பாகி சிஎஸ்கேவை விட்டு விலகுவதாகவும் உறுதியாகியுள்ளது. இந்த பதிவு மூலம் சிஎஸ்கேவில் தற்போது எதுவும் சரி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

Story first published: Tuesday, July 19, 2022, 12:38 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+