Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வுடன் மோதல்.. தொடரும் காயம்.. டி20 உலககோப்பை கனவு அம்பேல்..? ஜடேஜாவுக்கு கட்டம் சரியில்ல

துபாய் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜாவின் டி20 உலகக் கோப்பை கனவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் ஜடேஜா விளையாடினார்.

Recommended Video

ஐசிசி ஊடக உரிமைகள்: ஸ்டார்-ல் உலகக் கோப்பை போட்டிகள் இல்ல! பகிரவும் Sony- Zee!

ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது தொடரிலிருந்த நீக்கப்பட்டு, அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கேவுடன் மோதல்

சிஎஸ்கேவுடன் மோதல்

ஜடேஜாவுக்கு நடப்பு ஆண்டில் மட்டும் 3வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலகியதில் இருந்தே அவருக்கு கட்டம் சரியில்லை. சிஎஸ்கேவுடன் மோதல் போக்கை கடைபிடித்த ஜடேஜா காயம் எற்பட்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதன் பின்னர் இங்கிலாந்து தொடருக்கு திரும்பிய ஜடேஜா, அணியில் தனது இடத்தை உறுதி செய்த தருணத்தில், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயம் ஏற்பட்டு அணியிலிருந்து விலகினார். தற்போது 3வது முறையாக ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஒரே காயம் மீண்டும், மீண்டும் ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை செய்வதே சரியான தீர்வாக இருக்கும்.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால், டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும், தங்களது வீரர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் ஜடேஜாவுக்கு காயம் எற்பட்டு இருப்பதால், அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது.

டி20 உலககோப்பை

டி20 உலககோப்பை

மேலும் ஜடேஜாவின் உடல் தகுதி இந்த நிலையில் இருப்பதால், அவரை நம்பி அணியில் தேர்வு செய்வதும் சறுக்கலை தரும். காரணம், ஜடேஜாவை நம்பி யுத்திகளை அமைத்த பிறகு அவர் காயம் என்று வெளியேறிவிட்டால், அது பின்னடைவு தானே. இப்படி ஒரு நிலையை எந்த கேப்டனும் விரும்பமாட்டார்கள். இதனால் ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேலுக்கே அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

Story first published: Friday, September 2, 2022, 21:49 [IST]
Other articles published on Sep 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+