Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங் -பௌலிங் இரண்டிலும் அதிரடி... ஆர்சிபி பௌலர்களையும் பீல்டர்களையும் திணறடித்த ஜத்து!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டியில் சிஎஸ்கே -ஆர்சிபி அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே 192 ரன்களை ஆர்சிபிக்கு இலக்காக கொடுத்தது.

போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கலான ஆட்டத்தை அளித்தார் ரவீந்திர ஜடேஜா.

19வது போட்டி

19வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சிஎஸ்கே, 192 ரன்களை ஆர்சிபிக்கு இலக்காக அளித்தது. அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் -பாப் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.

சிறப்பான ஜடேஜா

சிறப்பான ஜடேஜா

இன்றைய போட்டி சிஎஸ்கேவிற்கு சிறப்பாக அமைந்தது. 28 பந்துகளில் 62 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை சிறப்பாக உயர்த்தினார் ரவி ஜடேஜா. 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸ்கள் என ரன் மழையை குறிப்பாக இறுதி ஓவரில் 36 ரன்களை அடித்து அதிரடி காட்டினார்.

தொட்டதெல்லாம் பொன்

தொட்டதெல்லாம் பொன்

மேலும் ஒரு ஓவரை மெய்டன் செய்து அந்த ஓவரில் டீ வில்லியர்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். இன்றைய தினம் அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. அடுத்தடுத்து வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல் மற்றும் டீ வில்லியர்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் கிறிஸ்டியன் ரன் அவுட் ஆனார்.

அதிரடி பௌலிங்

அதிரடி பௌலிங்

இன்றைய தினம் ஆல்-ரவுண்ட் செயல்பாட்டை சிறப்பாக செயல்படுத்தினார். அவரது அதிரடி பௌலிங்கில் ஆர்சிபியின் வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். ஆர்சிபி வீரர்களில் விராட் கோலி உள்ளிட்ட 6 பேர் ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகினர்.

வெற்றி திரும்பிய தருணம்

வெற்றி திரும்பிய தருணம்

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி கேப்டன்கள் மற்றும் அந்த அணிகளுக்கிடையிலான இந்த போட்டி சிறப்பான வகையில் சிஎஸ்கே பக்கம் திரும்பியதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜாதான். பேட்டிங்கிலும் சிறிப்பாக விளையாடி ரன்ரேட்டை ஏற்றிய அவர், பௌலிங்கிலும் 3 விக்கெட்டுகள் மற்றம் ஒரு ரன்-அவுட்டை இன்றைய தினம் சிஎஸ்கேவிற்கு பரிசாக கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, April 25, 2021, 19:34 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+