For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"6,6,4,4" - நான்கே பந்து.. போட்டியை அப்படியே மாற்றிய "கேம் சேஞ்சர்" ஜடேஜா - சிஎஸ்கே-வின் சொத்து!

அபுதாபி: டி20 கிரிக்கெட்டில் தான் ஒரு "கேம் சேஞ்சர்" என்பதை மீண்டும் ஒருமுறை ரவீந்திர ஜடேஜா நிரூபித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.26) டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் விளையாடின.

இதில், இன்றைய சாதா சண்டேவை சூப்பர் சண்டேவாக்கி இருக்கிறது பரபரப்பான இந்த போட்டி.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

 அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர். இறுதிக் கட்டத்தில் ரஸல் 20 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் விளாசி சிறப்பான கேமியோ ரோல்ஸ் விளையாட, அந்த அணி 171 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் பிராவோவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட சாம் கர்ரனின் 4 ஓவர்களில் 56 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸை தொடங்கினர்.

 முதல் விக்கெட்டுக்கு 74

முதல் விக்கெட்டுக்கு 74

இதில், ருதுராஜ் - டு பிளசிஸ் ஜோடி வழக்கம் போல் எதிரணி பவுலர்களை அடித்து விளாசத் தொடங்கியது. ஃபாஸ்ட், ஸ்பின் என்று மாறி மாறி கொல்கத்தா பவுலர்களை இருவரும் விளாசினார்கள். குறிப்பாக, கொல்கத்தா அணியின் பலமான மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஓவர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதிலும், 2 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது. எகானமி 12.50. எனினும், ரஸல் ஓவரில் எட்ஜ் ஆன ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 2 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் கேட்ச்சானார். டு பிளசிஸ் சிக்ஸர்கள் அடிக்கவில்லை என்றாலும் 7 பவுண்டரிகளை விளாசியிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.

 ஏமாற்றிய தோனி

ஏமாற்றிய தோனி

பிறகு சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கியது. மொயீன் அலி 32 ரன்களிலும், அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 10 ரன்னிலும் அவுட்டாக, போட்டி மெல்ல மெல்ல கொல்கத்தா வசம் சென்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் எம்எஸ் தோனி, வருண் சக்கரவர்த்தி ஓவரில் வெறும் 1 ரன்னில் போல்டானார். ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில், 3ல் வருண் சக்கரவர்த்தி ஓவரில் தோனி அவுட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 கேம் சேஞ்சர் ஜடேஜா

கேம் சேஞ்சர் ஜடேஜா

தோனி அவுட்டான பிறகு, கொல்கத்தா முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அப்போது காலத்தில் இருந்தது ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் தான். 19வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு தேவை 12 பந்துகளில் 26 ரன்கள். பிரசித் வீசிய முதல் இரு பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, மூன்றாவது பந்தில் backward square-ல் பட்டாசு போல ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அதற்கு அடுத்த பந்தில், ஸ்ட்ரெய்ட்டில் ஒரு மெகா சிக்ஸரை பறக்கவிட்டார். கடைசி இரு பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை தெறிக்கவிட அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசப்பட்டது. 1,1,6,6,4,4.

 நிரூபித்த ஜடேஜா

நிரூபித்த ஜடேஜா

கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், சுனில் நரைன் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசி பந்தில் தீபக் சாஹர் சிங்கிள் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தார். இதனால் ரசிகர்களின் உச்சக்கட்ட பிரஷரை எகிற வைத்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் வெற்றிப் பெற்று, 10 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்து, 16 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது.

 இன்றும் மாஸ்

இன்றும் மாஸ்

தோனி அவுட்டான பிறகு, ஆட்டம் முழுவதும் கொல்கத்தா பக்கம் சென்ற நிலையில், மீண்டும் ஒருமுறை கேம் சேஞ்சராக விளையாடி அணியை வெற்றிப் பெற வைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதே 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில், இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த "Purple Cap" பவுலரான ஹர்ஷல் படேல் வீசிய ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு "Game Changer"-ஆக திகழ்ந்தார். இப்போது மீண்டும், தோற்க வேண்டிய ஒரு ஆட்டத்தில் இருந்து சென்னை அணியை காப்பாற்றி மீண்டும் தான் ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்துள்ளார் "சர் ரவீந்திர ஜடேஜா".

Story first published: Sunday, September 26, 2021, 20:33 [IST]
Other articles published on Sep 26, 2021
English summary
jadeja once again proved as game changer ipl 2021 - ஜடேஜா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+