Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா பாசம்.. ரவீந்திர ஜடேஜாவின் தமிழ்க் காதல்.. வேஷ்டி, சட்டையுடன் அசத்தும் 'அழகிய தமிழ் மகன்'

அகமதாபாத்: தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து ஜடேஜா பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மோசமான தோல்வியுடன் வெளியேறிய இந்திய அணி, அடுத்தடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ரவீந்திர ஜடேஜா, தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

ஜடேஜா தேர்தல் சர்ச்சை

ஜடேஜா தேர்தல் சர்ச்சை

இதனிடையே வங்கதேச தொடரில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்திருந்த சூழலில் திடீரென உடல்நலம் இன்னும் சரியாகவில்லை எனக்கூறி வெளியேறினார். அவரின் காயம் சரியாகி அணிக்கு திரும்ப 2023ம் ஆண்டு ஆகிவிடும் எனக்கூறப்பட்டு வருகிறது. ஆனால் காயத்துடன் குஜராத் தேர்தலில் தனது மனைவிக்காக 12 மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் மட்டும் மேற்கொண்டார்.

ஜடேஜாவின் தமிழ்க் காதல்

ஜடேஜாவின் தமிழ்க் காதல்

இதனால் உண்மையாகவே ஜடேஜா காயம் காரணமாகவே வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்து விலகினாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஜடேஜா பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் துண்டு அணிந்து புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார.

அழகிய தமிழ்மகன்

அழகிய தமிழ்மகன்

அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜடேஜா, தென்னிந்தியாவின் அடையாளத்தை உணர்கிறேன். தமிழ்க் காதல் என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, அழகிய தமிழ் மகன் எனக் குறிப்பிட்டு ஜடேஜாவின் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஜடேஜாவின் வரலாறு

ஜடேஜாவின் வரலாறு

பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்டுகள், 171 ஒருநாள், 64 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 210 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 ஆட்டங்களில் விளையாடிய 3-வது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் ஜடேஜா

சிஎஸ்கே அணியில் ஜடேஜா

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார். ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய பேட்டிங் மோசமானதாலும் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 13, 2022, 16:22 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+