Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் பவுலர் தரவரிசை.. முதல் இரு இடங்களும் இந்திய வீரர்களுக்கே!

மும்பை: சர்வதேச டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் முதல் இரு இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.

ஐசிசி, இன்று வெளியிட்ட டெஸ்ட் பவுலர்கள் தர வரிசை பட்டியலில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

புள்ளிகள்

புள்ளிகள்

ஜடேஜாவுக்கு 897 புள்ளிகளும், அஸ்வினுக்கு 849 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இலங்கை ஸ்பின்னர் ரங்கனா ஹீரத் 3வது இடத்தில் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. முதல் 3 இடங்களிலுமே சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம்தான்.

தவான் முன்னேற்றம்

தவான் முன்னேற்றம்

பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், தவான், 21 இடங்கள் முன்னேறி 39வது இடம் பிடித்துள்ளார். 190 மற்றும் 14 ரன்களை முறையே முதல் மற்றும் 2வது இன்னிங்சில் விளாசியிருந்தார் தவான். இதனால் தர வரிசையில் முன்னேற்றம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்திய இங்கிலலாந்தின் பென் ஸ்டோக்ட்ஸ் பேட்டிங் தர வரிசையில் 12 இடங்கள் முன்னேறி, 25வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 112 மற்றும் 31 ரன்கள் விளாசியிருந்தார். பவுலர்கள் தர வரிசையில் இவருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெரிய வெற்றி, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜானி பெய்ர்ஸ்டோவை 9வது இடத்திற்கும், அலைஸ்டர் குக்கை 12வது இடத்திற்கும் முன்னேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 1, 2017, 18:11 [IST]
Other articles published on Aug 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+