Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவை வம்பிழுத்த கம்பீர்.. உலககோப்பை தொடரில் சேர்க்க கூடாதாம்.. ஒரே வரியில் பதிலடி தந்த ஜடேஜா

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டிய சுழற் பந்துவீச்சாளர்களை கவுதம் கம்பீர் தேர்வு செய்தார்.

இதில் ஜடேஜாவின் பெயரை அவர் வேண்டுமென்று தவித்தார். ஜடேஜா தற்போது காயம் காரணமாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வில்லை.

மேலும் ஜடேஜாவின் மாற்று வீரராக அக்சர்பட்டேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

ஆசிய கோப்பை தொடரின் போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதும் இதனை அடுத்து டி20 உலக கோப்பையில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முழு உடல் தகுதியை பெறவில்லை. எனினும் அதன் பிறகு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜடேஜா அந்த தொடரை விளையாடாமல் தன்னுடைய மனைவி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்காக வேட்பாளர் ஆக நின்றார்.

கம்பீர் அணி

கம்பீர் அணி

இதனால் ஜடேஜா தனது மனைவிக்கு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் அதே கட்சியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் உலகக்கோப்பை அணிக்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை நிகழ்ச்சி ஒன்றில் தேர்வு செய்தார். அதில் அக்சர்பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் ஆகியோர் பெயரை மட்டுமே கம்பீர் பயன்படுத்தினார். ஜடஜாவை கம்பீர் தனது அணியில் சேர்க்கவில்லை.

 ஜடேஜா பதிலடி

ஜடேஜா பதிலடி

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், அக்சர்பட்டேல் கடந்த சில போட்டிகளாக எந்த தவறும் செய்யவில்லை. இதனால் ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேலை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். இதனால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதுக்கு பதில் அளித்துள்ள ஜடேஜா ஏதும் பேச வேண்டாம் சிரித்தால் போதும் என்று ட்வீட் போட்டு உள்ளார்.

 எப்போது திரும்புவார்?

எப்போது திரும்புவார்?

கம்பீரின் இந்த பேச்சு ஜடேஜாவை ஏமாற்றம் அடைய செய்திருக்கலாம். இதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது டிவிட் போட்டுள்ள ஜடேஜா, களத்திலும் அதற்கு பதில் விரைவில் அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். தற்போது ஜடேஜா தனது உடல் தகுதியை நிரூபிக்கும் பொறுப்பில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஜடேஜா அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 12, 2023, 23:26 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+