Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றரை வருடம் தூங்கவில்லை... வாழ்வில் அப்படி ஒரு பெரும் சோதனை... ஜடேஜாவுக்குள் இப்படி ஒரு சோகமா?

மும்பை: தன் வாழ்நாளில் மிக மோசமான காலத்தைப்பற்றி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனம்திறந்துள்ளார்.

Recommended Video

Ravindra Jadejaகு இப்படி ஒரு சோகமா?ஒன்றரை வருடம் தூங்கவில்லை | Oneindia Tamil

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தற்போது பிசிசிஐ-ன் பபுளில் இருக்கும் அவர்கள் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து பறக்கின்றனர்.

இந்த தொடர் குறித்து எடுக்கப்பட்ட பேட்டியில் ரவீந்திர ஜடேஜா தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சரியாக தூங்காமல் கவலைப்பட்டு கொண்டே இருந்தேன் எனத்தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் என்றால் உடனே நினைவுக்கு வருவது போல ஒரு பெயரை சம்பாதித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இவரின் தற்போதைய செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தாலும் 2018ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்தது. அந்தாண்டில் அவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே அவ்வளவாக கிடைக்கவில்லை.

 வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

பவுலிங், ஃபீல்டிங் என படு சொதப்பல் செய்து வந்தார். இதனால், XI அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வந்தார். பின்னர் மனவேதனை அடைந்த ஜடேஜா, கடும் பயிற்சிக்கு பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது ஃபார்மை நிரூபித்து கம்பேக் கொடுத்தார்.

உரக்கமே இல்லை

உரக்கமே இல்லை

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா, உண்மையை கூற வேண்டும் என்றால், அந்த ஒன்றரை வருடம் எனது வாழ்வில் மிக மோசமானது நாட்கள். என்னால் ஒருநாள் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஒன்றரை வருடமும் சரிவர தூங்காத நாட்களாகவே இருந்தது. அதிகாலை 4-5 மணி வரை விழித்திருந்து, மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன்."

மிகுந்த கவலை

மிகுந்த கவலை

நான் உறங்கும் நிலையில்தான் இருப்பேன். ஆனால் தூக்கம் வராது. அந்த காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் நான் இடம்பெறுவேன். ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பே கிடைக்காது. சர்வதேச தொடர்களுக்கு சென்றதால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று திறமையை நிரூபிக்க முடியவில்லை. அதே போல் மறுபுறம் இந்திய அணியில் எனது திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முக்கிய தருணம்

முக்கிய தருணம்

2018ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து பதிலளித்தார். அதில் அந்த ஒரு போட்டிதான் என் வாழ்க்கையை மாற்றியது. இங்கிலாந்து போன்ற களத்தில் சிறந்த பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது, உலகில் எங்கு வேண்டுமானாலும் இனி விளையாடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு தான் எனது ஆட்டம் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பானது எனக்கூறினார்.

Story first published: Sunday, May 30, 2021, 16:29 [IST]
Other articles published on May 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+