Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருந்த ஒன்னும் போச்சா??.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜடேஜா கொடுத்த ஷாக்.. குழப்பத்தில் ஷிகர் தவான்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் ஜடேஜா விளையாடுவாரா என்பது குறித்து கேப்டன் ஷிகர் தவான் அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ரோகித், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷிகர் தவான் தலைமையிலான இளம் படை களமிறங்குகிறது. இதே போல ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜடேஜா திடீர் விலகல்?

ஜடேஜா திடீர் விலகல்?

இந்நிலையில் தான் ரவீந்திர ஜடேஜா இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜாவுக்கு மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக விளையாடுவது சந்தேகம் எனக்கூறப்பட்டது. இதற்கேற்றார் போலவே அவரும் பயிற்சி முகாமில் கலந்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

தவான் கொடுத்த அப்டேட்

தவான் கொடுத்த அப்டேட்

இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் ஷிகர் தவான், தற்போது வரை ஜடேஜாவுக்கு சிறிய வலி மூட்டுப்பகுதியில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. அவரை பிசியோதெரபிஸ்ட்கள் பார்த்து வருகிறார்கள். ஆட்டத்தின் போது தான் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

கடும் பின்னடைவு

கடும் பின்னடைவு

இந்திய அணியில் அனுபவ வீரர்களாக ஜடேஜா மற்றும் தவான் மட்டுமே இருந்தனர். இதில் தற்போது ஜடேஜாவும் ஒதுங்கியுள்ளதால், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் டி20 உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கும் இளம் வீரர்கள், தங்களது திறமையை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பாக அமையலாம்.

Story first published: Friday, July 22, 2022, 12:58 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+