Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5வது வீரராக ஜடேஜாவை களமிறக்க காரணம்.... உண்மையை போட்டுடைத்த தோனி!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.

Recommended Video

பெங்களூரு அணிக்கு முதல் தோல்வியை கொடுத்த சென்னை சிங்கங்கள்: 69 ரன்களில் அபார வெற்றி..!

இதில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக ரன் குவிப்பை செய்ததுடன் ஆர்சிபி அணியின் ஸ்கோரையும் சுருக்கி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஆல்-ரவுண்டர் செயல்பாட்டை அளித்து அணியின் ரவீந்திர ஜடேஜா அணியின் ஹீரோவாக செயல்பட்டார்.

19வது போட்டி

19வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சிஎஸ்கே 192 ரன்களை ஆர்சிபிக்கு இலக்காக அளித்திருந்தது. 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்த இலக்கை சிஎஸ்கே செய்திருந்தது.

63 ரன்கள் குவிப்பு

63 ரன்கள் குவிப்பு

இந்த போட்டியின் ஹீரோவாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டார். பேட்டிங்கில் 63 ரன்களை குவித்திருந்த அவர், பௌலிங்கிலும் 3 விக்கெட்டுகளையும் ஒரு ரன்-அவுட்டையும் செய்திருந்தார். பீல்டிங்கிலும் கலக்கினார். இதையடுத்து அரைசதம் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சிஎஸ்கே வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

37 ரன்களை குவித்த ஜடேஜா

37 ரன்களை குவித்த ஜடேஜா

ஹர்ஷல் படேலின் கடைசி ஓவரில் பேட்டிங் செய்த ஜடேஜா 37 ரன்களை எடுத்திருந்தார். இதனால் ஹர்ஷல் படேல் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். மேலும் இந்த ரன்குவிப்பின் மூலம் ஒரே ஓவரின் அதிக ரன்களை குவித்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.

தோனி பாராட்டு

தோனி பாராட்டு

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, ஜடேஜா போட்டியின் தன்மையை சிறப்பாக மாற்றக்கூடிய வீரர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரிடம் பேட்டிங்கில் சிறப்பான மாற்றத்தை பார்க்க முடிவதாகவும் தோனி கூறியுள்ளார்.

கட்டுப்படுத்துவது கடினம்

கட்டுப்படுத்துவது கடினம்

அதனால்தான் அவரை 5வது வீரராக இன்றைய போட்டியில் களமிறக்கியதாகவும் தோனி தெரிவித்துள்ளார். அதேபோல இடதுகை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும்போது அவர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் இன்றைய போட்டியில் அதுதான் நடந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 25, 2021, 23:19 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+