Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்ஸ்டாவில் ஜடேஜா செய்த விஷயம்.... சிஎஸ்கேவில் இருந்து விலகுவது உறுதி??.. தோனியுடனும் சண்டையா?

மும்பை: சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

Recommended Video

ENG vs IND CSK Captaincy சர்ச்சைக்கு Ravindra Jadeja பதில் *Cricket

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசன் முதல் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கிறது.

இதில் இன்னும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று ஜடேஜாவின் கேப்டன்சி சர்ச்சை தான்.

கேப்டன்சி பிரச்சினை

கேப்டன்சி பிரச்சினை

ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளை தழுவியது. கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. கேப்டன்சி மாற்றியதில், அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.

ஜடேஜாவின் முடிவு

ஜடேஜாவின் முடிவு

இந்நிலையில் அதனை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டு ஐபிஎல் பதிவுகளை திடீரென முற்றிலுமாக நீக்கியுள்ளார். சிஎஸ்கே குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

தோனியுடன் சண்டை

தோனியுடன் சண்டை

இது ஒருபுறம் இருக்க, தோனிக்கும் - ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தோனியின் பிறந்தநாளுக்கு ரவீந்திர ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் இந்தாண்டு மற்ற அனைத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்த போதும், ஜடேஜா எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.

2023ல் வரும் சிக்கல்

2023ல் வரும் சிக்கல்

இதன் மூலம் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி ஆகியோருடன் ஜடேஜா தற்போது மனக்கசப்பில் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.

Story first published: Saturday, July 9, 2022, 10:58 [IST]
Other articles published on Jul 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+