
3வது டெஸ்ட் போட்டி
ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 21 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த புஜாரா (1), ஜடேஜா (4), ஸ்ரேயாஸ் ஐயர் (0), கே.எஸ்.பரத் (17) என சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். தனி ஆளாக அணியை மீட்க போராடிய விராட் கோலியாலும் 22 ரன்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கெல்லாம் இந்திய அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி பவுலிங்
மிகவும் குறைந்த ஸ்கோர் என்பதால் எப்படியாவது ஆஸ்திரேலிய அணியை அதிக முன்னிலை பெற விடக்கூடாது என்பதில் இந்திய பவுலர்கள் தீவிரம் காட்டியாக வேண்டும். ஆனால் அதற்கு தொடக்கத்திலேயே ஆப்பு வைத்தார் ரவீந்திர ஜடேஜா. ஆட்டத்தின் 4வது ஓவரில் பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜா நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுசாக்னேவின் விக்கெட்டை எடுத்தார்.

அவுட் கிடையாது
அவுட்சைட் ஆஃப் திசையில் வீசப்பட்ட பந்தை லபுசாக்னே கட் ஷாட் அடிக்க முயன்றார். எதிர்பார்த்ததை விட மிகவும் கீழாக சென்ற அந்த பந்து ஸ்டம்பில் பட்டு விக்கெட் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் 2வது விக்கெட்டை கைப்பற்றிவிட்டனர் என உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஆனால் இறுதியில் அது நோ பால் தான், மிகவும் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் என்பது போல அம்பயர் சிக்னல் காட்டினார்.

என்ன விளைவு
இதன் விளைவாக 14 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என இருந்திருக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி 2வது விக்கெட்டிற்கு 50 ரன்களையும் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. இது நல்ல அடிதளமாக அமைந்தது. இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா வீசும் 3வது நோ பால் இதுவாகும். இதே போட்டியின் 2வது ஓவரின் போது உஸ்மான் கவாஜாவுக்கு நோ பால் வீசியிருந்தார். அவரும் தற்போது 30 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டார்.

சுவாரஸ்ய நிகழ்வு
இதனையெல்லாம் விட சுவாரஸ்யம் 2வது டெஸ்டின் போது ஜடேஜா கடைசி விக்கெட்டை எடுத்தவுடன் வெற்றி பெற்றுவிட்டோம் என இந்திய வீரர்கள் கிளம்பிவிட்டனர். ஆனால் அது நோ பால் எனக்கூறி அனைத்து வீரர்களையும் மீண்டும் அழைத்து போட்டியை நடத்தினார் கள நடுவர். எனவே ஜடேஜா தனது நோ பால் பிரச்சினையை சரிசெய்துக்கொண்டே தீர வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











