Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீதிமன்றம் செல்லும் ஜடேஜா - ரிவாபா ஜோடி.. கடைசி சம்மன் அனுப்பப்பட்டது.. அப்படி என்னதான் பிரச்சினை!

குஜராத்: ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா நீதிமன்றத்தில் ஆஜராக, அதிரடியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா.

காயத்தால் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து ஜடேஜா, இலங்கை தொடர் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார்.

மகிழ்ச்சியான நாட்கள்

மகிழ்ச்சியான நாட்கள்

குறிப்பாக பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் அளவிற்கு ரோகித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இலங்கையுடனான 2வது டி20 போட்டியில் 18 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். இதனால் டி20 உலகக்கோப்பையிலும் அவர் தான் டாப் ஆர்டர் வீரராக இருப்பார் எனத்தெரிகிறது. இப்படி மகிழ்ச்சியாக உள்ள ஜடேஜாவுக்கு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

 என்ன ஆனது

என்ன ஆனது

கடந்த 2018ம் ஆண்டு ஜடேஜாவின் மனைவி ரிவாபா மற்றும் அவரது தாயாருடன் காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டிச்சென்ற ரிவாபா, முன்னே சென்றுக்கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், ஜடேஜாவின் மனைவியை மிகவும் மோசமான முறையில் தாக்கியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

தேவையில்லாத தாக்குதல்

தேவையில்லாத தாக்குதல்

இப்படி கொடுமைகள் ஒருபுறம் நடக்க, மோட்டர் சைக்கிளில் விபத்துக்குள்ளான ப்ரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவிக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் போலீசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜாம்நகர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 கடைசி சம்மன்

கடைசி சம்மன்

இந்த வழக்கு விசாரணைக்காக பல முறை சம்மன் அனுப்பிய போதும், ஜடேஜாவின் மனைவி ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த நீதிமன்றம், இந்த முறை " இதுதான் கடைசி சம்மன், நேரில் வந்து ஆஜாரகி உங்கள் கருத்தை சொல்லுங்கள், இல்லையென்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது". மனைவியுடன் ஜடேஜாவும் நீதிமன்றம் செல்வார் எனத்தெரிகிறது.

Story first published: Wednesday, March 2, 2022, 16:27 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+