Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நோ பால விடுங்க.. இந்த சாதனைய பாருங்க” 3வது டெஸ்டில் ஜடேஜா அட்டகாச ரெக்கார்ட்.. ரசிகர்கள் வியப்பு!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மீது அதிக விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் அசால்ட்டாக பிரமாண்ட சாதனையை நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியால் நினைத்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்பட முடியவில்லை. முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்ப முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சொதப்பிய ஜடேஜா

சொதப்பிய ஜடேஜா

மிக குறைவான ஸ்கோரை அடித்திருப்பதால் இந்தியா சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூழலில் ரவீந்திர ஜடேஜா ஏமாற்றம் தந்தார். தனது 2வது ஓவரிலேயே நோ பாலை வீசி அனைவரைக்கும் அதிருப்தியை கொடுத்தார். அந்த பந்தினால் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. ஆனால் 3வது ஓவரிலேயே மார்னஸ் லபுசாக்னே விக்கெட்டை எடுத்த போது, அதுவும் நோ பாலாக வீசிவிட்டார். இதனால் விக்கெட்டில் இருந்து தப்பிய லபுசாக்னே 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

சாதனை படைப்பு

சாதனை படைப்பு

இதற்காக ஜடேஜா மீது விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்து பதிலடி கொடுத்துள்ளார். இப்போட்டியில் அவர் எடுத்த விக்கெட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மட்டும் 500 விக்கெட்களை எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த கபில் தேவ் மட்டுமே செய்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 356 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர் 9031 ரன்களையும், 687 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

 பெருமை மிகு பட்டியல்

பெருமை மிகு பட்டியல்

இந்த அட்டகாசமான சாதனையை ஜடேஜா தனது 298வது சர்வதேச போட்டியில் செய்திருக்கிறார். சர்வதேச அளவை எடுத்துக்கொண்டால் இச்சாதனையை செய்யும் 11வது வீரர் ஜடேஜா ஆகும். இந்த பட்டியலில் வசீம் அக்ரம், காலிஸ், இம்ரான் கான், சகிப் அல் ஹசன், சாஹித் அஃப்ரிடி, டேனியல் விட்டோரி, சமிண்டா வாஸ், ஷான பொல்லாக், இயான் போதம் ஆகியோர் உள்ளனர்.

ஜடேஜா தந்த திருப்புமுணை

ஜடேஜா தந்த திருப்புமுணை

நோ பால் வீசி சொதப்பினாலும், ஜடேஜா தான் பெரிய திருப்புமுணையை கொடுத்தார். ட்ராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் என ஆஸ்திரேலியாவின் டாப் 4 பேட்ஸ்மேன்களையும் ஜடேஜா தான் வீழ்த்தினார். நல்ல ஃபார்மில் இருப்பதால் மேலும் சில விக்கெட்களை எடுப்பார் எனத்தெரிகிறது.

Story first published: Wednesday, March 1, 2023, 17:42 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+