Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மகேந்திர சிங்-களை நான் பார்த்துவிட்டேன்.. ரவீந்திர ஜடேஜா கூறிய சுவாரஸ்ய தகவல்.. இது தெரியாம போச்சே

மும்பை: இந்திய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது ஆரம்ப கால கிரிக்கெட் பயணம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், 2 மகேந்திர சிங்-ஐ பார்த்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக இருந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்தாண்டு என்.சி.ஏவுக்கு சென்ற அவர், சுமார் 6 மாதங்களாக ஓய்வில் இருந்தார்.

இதன் பின்னர் தற்போது நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையில் தான் மீண்டும் அணிக்கு திரும்பினார். எனினும் தனது முதல் போட்டியிலேயே தொடர் நாயகன் விருதை பெற்று அசத்தினார்.

அட்டகாச கம்பேக்

அட்டகாச கம்பேக்

இதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் அட்டகாசமான கம்பேக்கை கொடுத்துள்ளார். மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. எனினும் அப்போது கே.எல்.ராகுலுக்கு நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 69 பந்துகளில் 45 ரன்களை சேர்த்தார். இதனால் இந்தியா வெற்றி பாதைக்கு சென்றது. இதே போல பவுலிங்கில் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

மனம் திறந்த ஜடேஜா

மனம் திறந்த ஜடேஜா

இந்நிலையில் தனது கம்பேக் குறித்து ஜடேஜா பேசியுள்ளார். அதில், நான் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய போது, வேகப்பந்துவீச்சாளராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அவர்களின் பவுன்ஸர்களை பார்க்கும் போது ஆசையாக இருக்கும். ஆனால் பவுன்ஸர்கள் போடும் அளைவிற்கு என்னிடம் வேகம் இல்லை என்பதால் சுழற்பந்துவீச்சாளர் ஆனேன். இதனை மகி அண்ணனிடம் கூறினேன். ஆனால் அது மகேந்திர சிங் தோனி அல்ல.

2 மகேந்திர சிங்

2 மகேந்திர சிங்

ஜாம்நகரில் என்னுடைய பயிற்சியாளரின் பெயர் மகேந்திர சிங் சௌகான், எனது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர்களுக்கு இடையில் தான் எனது பயணமே உள்ளது. ஐபிஎல் ஏலம் நடக்கும் போது எனக்கு 20 வயது இருக்கும். அப்போது சுமார் 1.30 மணி நேரம் கழித்து தாமதமாக தான் எனது பெயர் ஏலத்திற்கு வந்தது. அப்போது 75,0000 டாலர்கள் என்றால் எனக்கு எவ்வளவு என்றுக்கூட தெரியாது.

முதல் யோசனை

முதல் யோசனை

இந்திய மதிப்பில் ரூ.3 - ரூ.3.5 கோடி என தெரிந்தவுடன் அளவில்லா மகிழ்ச்சியில் குதித்தேன். அப்போது எந்த காரை வாங்கலாம் என்று தான் முதலில் நினைத்தேன். அதன்பின்னர் நடந்தவற்றை தான் இந்த உலகம் பார்த்தது என ஜடேஜா கூறியுள்ளார். ஜடேஜா அடுத்ததாக வரும் மார்ச் 31ம் தேதி முதல் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் கம்பேக் தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 18, 2023, 19:16 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+