Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்

லெய்செஸ்டர்: ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கான பயிற்சி போட்டியாக இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கவுண்டி அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடியுள்ள இந்திய அணி 364 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்துள்ளனர்.

சிறந்த ஸ்கோர்

சிறந்த ஸ்கோர்

இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 98 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். இதே போல மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 56 ரன்களை குவித்து அசத்தினர். ஆனால் இவர்கள் இருவருமே 2 முறை பேட்டிங் செய்து தான் இந்த ஸ்கோரை அடிக்க முடிந்தது.

 2 முறை விக்கெட்

2 முறை விக்கெட்

2வது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா டக் அவுட்டாகி வெளியேறினார். இதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் 30 ரன்களை அடித்திருந்த போது நவ்தீப் சைனியால் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். எனினும் இருவருக்கும் பேட்டிங் பயிற்சி தேவை என்பதால், 2வது வாய்ப்பு கொடுக்கப்பட்டு அரைசதம் அடித்தனர்.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. ஜூலை 1ல் நடக்கும் கடைசி போட்டியில் வென்றுவிட்டால் 4வது முறையாக இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றிவிடலாம். எனினும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

Story first published: Sunday, June 26, 2022, 18:51 [IST]
Other articles published on Jun 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+