Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திறந்தவெளியில் ஜடேஜா வெறித்தனமான பயிற்சி... பிசிசிஐ-ன் திட்டம் இதுதானா... உற்சாகத்தில் ரசிகர்கள்!

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தொடங்கியுள்ளார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணி வீரர்கள், நேற்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தனர்.

குவாரண்டைன்

குவாரண்டைன்

கடந்த ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்கள், சுவாத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பவுல் மைதான ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக இங்கிலாந்தில் 14 நாட்கள் மிக கண்டிப்பான குவாரண்டைனில் வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்தியாவில் குவாரண்டைனில் இருந்ததால் இங்கிலாந்தில் 10 நாட்கள் மட்டும் குவாரண்டைன் இருக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாரண்டைன் விதிமுறைகள்

குவாரண்டைன் விதிமுறைகள்

இது மிக முக்கியமான போட்டி என்பதால் 10 நாள் குவாரண்டைனில் 3 நாட்கள் மட்டும் கடும் குவாரண்டைனில் இருந்துவிட்டு 4வது நாளில் இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அதாவது அந்த 3 நாட்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ஜடேஜா, இன்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். குவாரண்டைன் காரணமாக அவர் மட்டும் களத்தில் தனியாக பந்துவீசி பயிற்சி மேற்கொண்டார். வரும் நாட்களில் குறைந்த அளவிலான வீரர்கள் ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

பிசிசிஐ ப்ளான்

பிசிசிஐ ப்ளான்

இங்கிலாந்து களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாகும். அதனால் இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா ஜோடியை பயன்படுத்தலாம் என்ற திட்டத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. ஜடேஜா தீவிர பயிற்சி மேற்கொள்வதை பார்த்தால் அது உறுதியாகியுள்ளது.

 தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக நியூசிலாந்து முன்கூட்டியே இங்கிலாந்து சென்றடைந்து, அங்கு அந்நாட்டுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி மட்டுமே உள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தீவிரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 7, 2021, 8:25 [IST]
Other articles published on Jun 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+