Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மருத்துவமனையில் ஜடேஜா அனுமதி.. டி20 உலககோப்பை அணியிலிருந்து விலகல்.. பிசிசிஐ மாற்று ஏற்பாடு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய இந்திய அணி வீரர் ஜடேஜாவுக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended Video

Ravindra jadeja இந்திய அணிக்கு திரும்புவது குறித்து Update

நடப்பாண்டில் 3வது முறையாக காயம் ஏற்பட்டு, ஜடேஜா இந்திய அணியிலிருந்து விலகினார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஜடேஜா தள்ளிப்போட்டார்.

இந்த நிலையில், ஜடேஜாவுக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது மீண்டும் காயம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதற்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்பதால், அவருக்கு மருத்துவ நிபுணர்கள் அதனை மேற்கொண்டனர்.இதிலிருந்து குணமடைந்து மீண்டும் களத்திற்கு திரும்ப, சுமார் 3 மாதம் காலமாகும் என்பதால். அவர் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விலகுவது உறுதியாகிவிட்டது.

ஜடேஜா நன்றி

ஜடேஜா நன்றி

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜடேஜா, தமக்கு அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜடேஜா, எனக்கு அறுவை சிகிச்சை செய்ய காரணமாக இருந்த பிசிசிஐ, மருத்துவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, விரைவில் களத்திற்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இந்த நிலையில், ஜடேஜாவுக்கு கால் மூட்டில் 2 பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதனை செய்தால் அவர் 6 மாதத்திற்கு கிரிக்கெட் விளையாட முடியாது. இதனால், தற்போது, சிறிய அளவிலான தற்காலிக நிவாரணத்துக்கு தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜடேஜா 6 வாரக்காலத்தில் உடல் தகுதியை எட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

பிசிசிஐ ஏற்பாடு

பிசிசிஐ ஏற்பாடு

இதனிடையே, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க வேண்டும். இதனால், ஜடேஜாவை ரிசர்வ் வீரராக அறிவித்து, உடல் தகுதியை எட்டிய உடன் மெயின் அணிக்கு கொண்டு செல்ல ஒரு பிளானும், மெயின் அணியிலேயே அறிவித்து, அதன் பிறகு உடல் தகுதியை பெறவில்லை என்றால் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்ட அக்சர் பட்டேலை தேர்வு செய்யும் ஒரு பிளானையும் பிசிசிஐ வகுத்துள்ளது,

Story first published: Thursday, September 8, 2022, 12:44 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+