Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்திவ் பட்டேல் தலைமைப் பண்பு உடையவர்...அனுபவ வீரர்...சொல்கிறார் கேரி கிர்ஸ்டன்

பெங்களூர் : கேரி கிர்ஸ்டன் ராயல் சாலஞ்சர்ஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் முன் டேனியல் வெட்டோரி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரி கிர்ஸ்டன் ராயல் சாலஞ்சர்ஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் முன் டேனியல் வெட்டோரி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

RCB appointed Gary Kirsten as head coach, after sacking Vettori

கடந்த ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் கேரி கிர்ஸ்டன். தற்போது டேனியல் வெட்டோரி நீக்கப்பட்ட நிலையில், இவர் அந்த இடத்துக்கு வந்துள்ளார். இந்த மாற்றத்தில் கோலியின் தலையீடு இருக்கிறது எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்போது கேரி கிர்ஸ்டன் மீது பெரிய சுமை உள்ளது. நல்ல வீரர்கள் இருந்தும் ஏன் பெங்களூர் அணி சென்ற ஐபிஎல்-இல் சொதப்பியது என கண்டுபிடித்து, அதற்கேற்ற திட்டங்கள் போட வேண்டும். சென்ற ஐபிஎல்-இல் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணி ஆறு போட்டிகளில் மட்டுமே வென்றது.

தன் புதிய பயிற்சியாளர் பனி குறித்து பேசிய கேரி கிர்ஸ்டன் தன் பயிற்சி முறைகள் மற்றும் பெங்களூர் அணி குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தான் பயிற்சி அளிக்கும் போது நான் இறங்கிப் போய் விளையாட மாட்டேன். என் வேலை வீரர்களின் திறன்களை வளர்ப்பதும், கூர் தீட்டுவதும் தான் என கூறினார்.

டிவில்லியர்ஸ், கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது மற்ற வீரர்கள் தங்களை அணியில் நிறுத்திக் கொள்ள, நல்ல திறமையை வெளிப்படுத்த வேண்டும் என கூறினார். மேலும், பெங்களூர் அணியில் யார் தலைமைப் பண்பு கொண்டு விளங்குகிறார்கள் என பேசுகையில், மிகவும் ஆச்சரியமான ஒரு செய்தியை கூறினார்.

RCB appointed Gary Kirsten as head coach, after sacking Vettori

பார்த்திவ் பட்டேல் சென்ற ஆண்டு 6-7 போட்டிகளில் தான் ஆடினார். ஆனால், சிறந்த தலைமைப் பண்பை வெளிபடுத்தினார். அது கேப்டன், வைஸ்-கேப்டன் போன்ற தலைமை அல்ல, அது முடிவெடுக்கும் போது சிறந்த யோசனைகளை சொல்லும் வகையிலான தலைமைப் பண்பு என தெரிவித்தார்.

Story first published: Friday, August 31, 2018, 13:39 [IST]
Other articles published on Aug 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+