Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாசா இதை கண்டுபிடிக்க முடியுமா? ஐபிஎல் அணியின் சின்னப்புள்ளத்தனமான கோரிக்கை - கலாய்த்த நெட்டிசன்கள்!

பெங்களூரு : விராட் கோலி, டீ வில்லியர்ஸ் அடித்த பந்துகளை நிலாவில் கண்டுபிடித்து தர முடியுமா என்று நாசாவிற்கு கோரிக்கை விடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டிவிட்டர்வாசிகள் கலாய்த்து தள்ளினர்.

பந்துகளை கண்டுபிடித்து தருவதற்கு நாசாவின் உதவியை பெறுவதை காட்டிலும் போட்டிகளில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கு உதவி பெற்றால் நல்லது என்று அவர்கள் கலாய்த்தனர்.

கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பட்டியலின் இறுதியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 நிலவில் பாகங்கள் கண்டுபிடிப்பு

நிலவில் பாகங்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரோவின் சந்திராயன் 2 விண்கலத்தின் மாயமான விக்ரம் லேண்டரின் நொறுங்கிய பாகங்களை நிலவில் நாசா கண்டுபிடித்துள்ளது. இதை கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியனை நாசா பாராட்டியுள்ளது.

நாசாவிற்கு ஆர்சிபி கேள்வி

விக்ரம் லேண்டரின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு சர்வதேச அளவில் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் அடித்த பந்துகளை நிலவில் கண்டுபிடித்து தரமுடியுமா என்று நாசாவிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது.

 கதற அடித்த ரசிகர்கள்

கதற அடித்த ரசிகர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இந்த வீடியோ வெளிவந்த உடனே, அதனை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். பந்துகளை தேடுவதற்கு உதவி கேட்பதை காட்டிலும், போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு நாசாவின் உதவியை நாடலாம் என்று கலாய்த்து தள்ளினர்.

போட்டிகளில் தோற்பதை காட்டிலும் மோசம்

தயவுசெய்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அட்மினை மாற்றுங்கள் என்றும், இறுதி போட்டிகளில் தோற்பதை காட்டிலும் இவர்களது டிவீட்கள் மோசமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டிருந்தனர்.

14 போட்டிகளில் 11 புள்ளிகள்

கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி பட்டியலின் இறுதியில் இடம் பெற்றிருந்தது. 14 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் மட்டுமே அந்த அணி பெற்றிருந்தது.

 ஏலத்தில் புதிய வீரர்கள்

ஏலத்தில் புதிய வீரர்கள்

அக்ஷ்தீப் நாத், டேல் ஸ்டேய்ன் உள்ளிட்ட அணியின் 12 வீரர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் புதிய வீரர்களை களமிறக்க அந்த அணி முடிவு செய்துள்ளது.

Story first published: Wednesday, December 4, 2019, 20:24 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+