Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 5 ஓவரில் எல்லாம் மாறிடுச்சி..CSK பவுலர்களுக்கு Hatsoff.. நாங்க சொதப்பியாச்சு-டுபிளஸிஸ் பேச்சு

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணி மீண்டும் வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர் சி பி களமிறங்கியது.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 58 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஆர் சி பி இருந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர் சி பி தோல்வியை தழுவியது.

rcb captain faf du plessis

இந்த தோல்வி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுப்ளிசிஸ் போட்டியின் தொடக்கத்தில் நான் பில்டிங் செய்ய டைவ் அடித்த போது கீழே விழுந்தேன். அப்போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இது எனக்கு அசௌகரியமாக இருந்தது. இதனால் சில ஓவர்கள் நான் களத்தில் இல்லை. இவ்வளவு பெரிய இலக்கை நாங்கள் சிறப்பாக தான் துரத்த தொடங்கினோம். கடைசி ஐந்து ஓவரில் போட்டியை முடிப்பதற்கு ஏற்ற வகையில் ஆட்டம் இருந்தது.

தினேஷ் கார்த்திக் இந்த கட்டத்தில் எல்லாம் மிகவும் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவார். ஆனால் இன்று நாங்கள் தோற்றோம் என்றால் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்கள் என்று அர்த்தம். சின்னசாமி மைதானத்தில் 200 ரன்கள் என்ற இலக்கை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் பணி துரத்த ஏதுவாக இருக்கும்.

ஆனால் நாங்கள் இறுதியில் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். கடைசி ஓவர்களில் போட்டியை முடிக்கும் அளவிற்கு ஆடுகளமும் ஏற்ற வகையில் தான் இருந்தது. ஆனால் இறுதியில் நான் பேட்டிங் செய்யும்போது பவரை இழந்தேன். இதனால் என்னால் சிக்சருக்கு பந்தை விரட்ட முடியவில்லை.

இது நிச்சயம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இது போன்ற ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிறைய திறமைகளை பயன்படுத்த வேண்டும். சிராஜ் சிறப்பாக செயல்பட்டார். எங்களால் வெற்றியை பெற முடியாதது வருத்தத்தை கொடுத்தாலும், அடுத்த போட்டி குறித்து யோசிக்க வேண்டும் என்று டுபிளசிஸ் கூறினார்.

Story first published: Tuesday, April 18, 2023, 6:25 [IST]
Other articles published on Apr 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+