Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்துல் தாக்கூர் போட்டியே மாற்றிவிட்டார்.. இப்படி பண்ணா ரன் ரேட் அடிவாங்கும்.. புலம்பிய டுபிளசிஸ்

கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் ஆர் சி பி அணி படுதோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ஆர் சி பி அணியின் கையே ஓங்கி இருந்த நிலையில் பேட்டிங்கில் சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய rcb அணி வீரர்கள் கே கே ஆர் இன் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதனால் 17 புள்ளி 4 ஓவரில் ஆர் சி பி அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

faf du plessis

இதனால் rcb அணியின் ரன் ரேட் மைனஸ் ஒன்னு புள்ளி இரண்டு ஐந்து ஆக குறைந்தது. தோல்வி குறித்து பேசிய ஆர் சி பி அணி கேப்டன் டுப்ளசிஸ் நாங்கள் 12 அல்லது 13 வது ஓவரில் ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தோம். ஆனால் அதன் பிறகு அனைத்தும் மாறிவிட்டது. கூடுதலாக 20 முதல் 25 ரன்களை வழங்கி விட்டோம்.

சர்துல் தாக்கூர் அபாரமாக விளையாடி ஆட்டத்தை எங்களிடம் கவர்ந்து சென்று விட்டார். இதைப் போன்று கொல்கத்தா அணியில் சுழற் பந்துவீச்சாளர்களும் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தான். ஆனால் அவர்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பான யுக்தியை கையாண்டு எங்களை வீழ்த்து விட்டார்கள்.

தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினார்கள். நாங்கள் இன்று மிகவும் சராசரியான பேட்டிங்க் தான் வெளிப்படுத்தினோம். மூன்று நாட்கள் முன்பு தான் மும்பையை வீழ்த்தி அபார கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் இன்று அனைத்தும் மாறிவிட்டது. இதுபோன்ற பெரிய தோல்வி ரன் ரேட்டை மிகவும் பாதிக்கும். குறைந்தபட்ச ஸ்கோர் அருகிலாவது நாம் தொட முயற்சி செய்ய வேண்டும் என்று ஆர் சி பி அணி கேப்டன் டுப்ளசிஸ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 6, 2023, 23:38 [IST]
Other articles published on Apr 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+