Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிக வலுவான நிலையில் ஆர்சிபி.. மும்பைக்கு எதிராக ஜாம்பவான்களை களமிறக்கும் கோலி.. பிளேயிங் 11 கணிப்பு

சென்னை : ஐபிஎல் 2021 தொடர் இன்றைய தினம் துவங்கவுள்ள நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது ஆர்சிபி.

கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறிய ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்றது.

இந்நிலையில் இந்த சீசனில் வெற்றிக்கான தீவிரத்துடன் ஆர்சிபி களமிறங்கியுள்ளது. அதன் வீரர்களும் சிறப்பான திறமைகளுடன் களமிறங்கியுள்ளனர்.

கோலாகல துவக்கம்

கோலாகல துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் இன்றைய தினம் கோலாகலமாக துவங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதவுள்ளது. சென்னையில் இந்த போட்டி துவங்கவுள்ளது. கடந்த சீசன் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் நீடித்தது.

சிறப்பான பயணம்

சிறப்பான பயணம்

இந்நிலையில் இன்று துவங்கவுள்ள ஐபிஎல் 2021 தொடர் அடுத்த மாதம் 30ம் தேதிவரை நீடிக்கவுள்ளது. 50 நாட்களை தாண்டி நடைபெறவுள்ள இந்த தொடரில் 8 ஐபிஎல் அணிகளும் தங்களது வெற்றியை நோக்கிய பயணத்தை துவங்கவுள்ளன. கடந்த சீசனில் அனைத்து அணிகளும் சிறப்பாகவே இந்த பயணத்தை மேற்கொண்டன. சில அணிகள் சொதப்பலான ஆட்டத்தையும் அளித்தன.

சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி

சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி

ஆனால் கடந்த சீசனில் சில போட்டிகளை தவிர்த்து ஆர்சிபி தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் தீவிரம் காட்டியது. வெற்றிக்கான தீவிரத்துடன் அந்த அணியின் படிக்கல் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்புரிந்தனர். ப்ளே-ஆப் சுற்றிற்கும் அந்த அணி முன்னேறியது. ஆயினும் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதி தோற்றது.

விராட் கோலி அறிவிப்பு

விராட் கோலி அறிவிப்பு

இந்நிலையில் இந்த சீசனில் அணியின் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து தேவ்தத் படிக்கல்லும் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மீண்டும் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

சிறப்பான வீரர்கள்

சிறப்பான வீரர்கள்

இன்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள ஆர்சிபி அணியில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், க்ளென் மாதக்ஸ்வெல், ஏபி டீ வில்லியர்ஸ், முகமது அசாருதீன் அல்லது ரஜட் படேடார், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமீசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ரன்களை கட்டுப்படுத்துவாரா சஹல்

ரன்களை கட்டுப்படுத்துவாரா சஹல்

இதில் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர், சைனி, சிராஜ் ஆகியோரின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும் என்று எதர்பார்க்கலாம். சஹல் ரன்களை அதிகமாக கொடுக்காமல் வக்கெட்டுகளை எடுத்தால் அணி சிறப்பான போட்டிகளை அளிக்க முடியும்.

இரவு 7.30 மணிக்கு துவக்கம்

இரவு 7.30 மணிக்கு துவக்கம்

இன்றைய போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ளது. சென்னையில் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் ஆர்சிபி -மும்பை இந்தியன்ஸ் மோதவுள்ள நிலையில் 7 மணிக்கு போட்டியின் டாஸ் போடப்படும்.

Story first published: Friday, April 9, 2021, 11:23 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+