Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. பெங்களூர் அபார வெற்றி!

Recommended Video

ஹைதராபாத்திற்கு எதிராக பெங்களூர் அபார வெற்றி!

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 5 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது.

RCB faces strongest SRH in crucial IPL 2018

பெங்களூர் அணி இன்று எப்படி வெற்றி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுவது கஷ்டம் என்ற நிலையில்தான் போட்டி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அந்த அணி மிகவும் வலிமையான ஹைதராபாத் அணியை எதிர் கொள்கிறது,. ஹைதராபாத் இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெறவேண்டும்.

இந்த போட்டியில் ஹைதராபாத் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.இரண்டு அணிகளிலும் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் செய்தது. பெங்களூர் 20 ஓவருக்கு 6 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தது. டி வில்லியரஸ் 69 ரன்கள் எடுத்தார். மொயின் அலி 63 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் இறங்கிய ஹைதராபாத் அதிரடியாக ஆடியது. வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார். மனிஷ் பாண்டே 62 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவரில் ஹைதராபாத் 3 விக்கெட்டிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, May 17, 2018, 23:45 [IST]
Other articles published on May 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+