இந்த வீரர் மட்டும் பைனலில் ஆடினால் கப் எங்களுக்கு தான்.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி.. அப்படி ஒரு ராசி!
அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முன்னேறி இருக்கும் நிலையில், அந்த இறுதிப் போட்டியில் ஒரு வீரர் மட்டும் விளையாடினால் நிச்சயம் தங்கள் அணிக்குத்தான் கோப்பை என பெங்களூர் அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அந்த வீரர் ஜோஷ் ஹேசில்வுட்.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக ஜோஷ் ஹேசில்வுட் இருக்கிறார். ஆனால், அந்தக் காரணத்திற்காக அவர் விளையாடினால் கோப்பை வெல்லும் என பெங்களூர் அணி ரசிகர்கள் நம்பவில்லை. மாறாக, ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை விளையாடிய இறுதிப் போட்டி எதிலும் அவரது அணி தோல்வியைச் சந்தித்ததில்லை என்பதைச் சுட்டிக்காட்டித்தான், ஜோஷ் ஹேசில்வுட் 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிச்சயமாக கோப்பை வெல்லும் எனக் கூறி வருகின்றனர்.

இதற்கு முன் ஜோஷ் ஹேசில்வுட் பங்கேற்று விளையாடிய இறுதிப் போட்டிகளில் என்ன நடந்தது? எத்தனை முறை அவர் இறுதிப் போட்டிகளில் விளையாடி கோப்பை வென்றுள்ளார் என்று பார்க்கலாம்.
- 2012 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணி இறுதிப் போட்டியில் கோப்பை வென்றது.
- 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் இடம் பிடித்திருந்தார். அந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் விளையாடியது. அப்போது ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
- அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார் ஜோஷ் ஹேசில்வுட். அந்த ஆண்டும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போது ஜோஷ் ஹேசில்வுட் இறுதிப் போட்டியில் இடம் பிடித்திருந்தார். அந்த அணி கோப்பை வென்றது.
- அடுத்து 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி முன்னேறியது. அந்த இறுதிப் போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடினார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது.
- அதன் பிறகு 2021 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் இடம் பெற்றிருந்தார். அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போது ஜோஷ் ஹேசில்வுட் இறுதிப் போட்டியில் விளையாடினார். ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.
- சமீபத்தில், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்தார் ஜோஷ் ஹேசில்வுட். அப்போதும் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
"நான் கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பவில்லை".. விராட் கோலியை சீண்டிய பும்ரா? ரசிகர்கள் கொதிப்பு
மொத்தம் ஆறு முறை பல்வேறு தொடர்களின் இறுதிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ஜோஷ் ஹேசில்வுட். அந்த ஆறு இறுதிப் போட்டிகளிலும் அவரது அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதை சுட்டிக்காட்டித்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள், இந்த முறை இறுதிப்போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடினால் நிச்சயம் கோப்பை வெல்லும் என நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களது நம்பிக்கை நிறைவேறுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications