அதிக விக்கெட் எடுத்த ஹர்சல் பட்டேல்..! ஆர்.சி.பி. அணி தக்க வைக்காதது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..
பெங்களூரு: ஐ.பி.எல். தொடர் பல கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. அடையாளத்தை கொடுத்துள்ளது.
அப்படி கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடி, புகழ் மற்றும் வாய்ப்பை பெற்றவர் தான் ஹர்சல் பட்டேல்.
2019 ரஞ்சி சீசனில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி கிடைக்காத இந்திய அணி வாய்ப்பு, ஐ.பி.எல். தொடரில் ஒரு சீசனில் கலக்கிய பின்பு கிடைத்தது.

ஆச்சரியம் காத்திருந்தது
இந்த நிலையில் ஹர்சல் பட்டேல் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியை தற்போது காண்போம். ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியில் இருந்த தம்மை, பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. அங்கு சென்றவுடன் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. என்னை ஏற்கனவே நன்கு ஆராய்ந்து கவனித்த பெங்களூரு அணி நிர்வாகம், எனக்கு கடைசி கட்ட ஓவர்களை வீசும் பொறுப்பை வழங்கியது.

ஆர்.சி.பியே காரணம்
என்னிடம் அதற்கான திறமைகள் இருப்பதாகவும், அதற்கு என்னை தயார்படுத்தி கொள்ளும் படியும் பெங்களூரு அணி நிர்வாகம் கூறியது. அவர்கள் அளித்த ஊக்கத்தால் தான், கடந்த சீசனில் அதிக விக்கெட் என்னால் எடுக்க முடிந்தது. இந்த நிலையில், அடுத்த சீசனிலும் பெங்களூரு அணிக்காக விளையாடவே ஆசைப்படுகிறேன்

காரணம் என்ன?
பெங்களூரு அணி வீரர்கள் தக்கவைக்கும் பட்டியலில் நான் இடம்பெறவில்லை. அப்போது, பெங்களூரு அணி நிர்வாக இயக்குனர் மைக் ஹேசன், நிதி நிலை காரணத்தால் தான் தம்மை தக்க வைக்க முடியவில்லை என்றும், மெகா ஏலத்தில் என்னை மீண்டும் எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்கள்
Recommended Video

டிராவிட் அறிவுரை
இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடிய போது எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஏனென்றால் ஐ.பி.எல். அனுபவமும், அதில் சிறப்பாக விளையாடியதால் கிடைத்த உத்வேகமும் கைக்கொடுத்தது. போட்டிக்கு முன் பயிற்சியாளர் டிராவிட் என்னிடம் தனியாக பேசினார். 10 ஆண்டு உள்ளூர் போட்டியில் விளையாடிய அனுபவம் உனக்கு இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் என்ன செய்தாயோ, அதையே இங்கும் செய் என்று அறிவுரை கூறினார். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று தர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications