Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் விலகியிருக்காரு... ஆர்சிபி வேற லெவல் திட்டம்...

பெங்களூரு : ஐபிஎல் 2021 தொடர் வரும் மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

Recommended Video

IPL 2021: அணியில் இருந்து வெளியேறிய Josh Phillipe.. உடனே மாற்று வீரரை எடுத்த RCB

இதையொட்டி கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் 8 அணிகளும் தங்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்வகையில் வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் ஆர்சிபியில் ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் ஜோஸ் பிலிப் தனது சொந்த காரணங்களால் அணியிலிருந்து விலகியுள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்

ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் இந்தியாவில் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் இறுதிப்போட்டி மே மாதம் 30ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 8 ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சி போட்டிகளை துவக்கியுள்ளன. முன்னதாக கடந்த மாதத்தில் ஐபிஎல் 2021 ஏலமும் சிறப்பாக நடைபெற்றது.

அணியிலிருந்து விலகல்

அணியிலிருந்து விலகல்

இந்த ஏலத்தில் தங்களது அணியின் தேவையை கருத்தில் கொண்டு, அனைத்து அணிகளும் வீரர்களை தேர்ந்தெடுத்தன. ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பிலிப் 20 லட்சம் ரூபாய் ஆதார விலைக்கு ஆர்சிபி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது தனது சொந்த காரணங்கள் காரணமாக ஒட்டுமொத்த தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.

மாற்று வீரராக சேர்ப்பு

மாற்று வீரராக சேர்ப்பு

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பின் ஆலனை மாற்று வீரராக ஆர்சிபி களமிறக்கியுள்ளது. ஜோஸ் விலகியுள்ளது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள ஆர்சிபி, ஆனால், அவரது சூழ்நிலைகளுக்கு ஆர்சிபி மதிப்பளிப்பதாகவும் அவருக்கு பதிலாக ஆலனை களமிறக்கியுள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் ஆலன் விக்கெட் கீப்பிங்கிலும் ஈடுபடுவார் என்றும் தெரிவித்துள்ளது.

விளையாடாத பின் ஆலன்

விளையாடாத பின் ஆலன்

பின் ஆலன் இதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்றாலும் சூப்பர் ஸ்மாஷ் 2020 -21 தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 512 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 அரைசதம், 56 பவுண்டரிகள் மற்றும் 25 சிக்ஸ்கள் அடக்கம். மேலும் இதன் சராசரியாக 56.86 உள்ளது. ஸ்டிரைக் ரேட் 193.94. ஆர்சிபி சிறப்பான தேர்வையே மேற்கொண்டுள்ளது என்று கூறலாம்.

Story first published: Thursday, March 11, 2021, 11:46 [IST]
Other articles published on Mar 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+