Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை தொடர்ந்து ஆர்சிபி வீரர்களும் தொடர்ல இருந்து விலகும் முடிவு... அடுத்தடுத்த அதிர்ச்சி

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் 20 போட்டிகள் சென்னை, மும்பை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன.

Recommended Video

IPL 2021: RCB Players விலகல்! Ashwinஐ தொடர்ந்து அடுத்தடுத்த அதிர்ச்சி | OneIndia Tamil

இந்த போட்டிகளில் பயோ பபுள், காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது ஆர்சிபியின் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களும் விலகல் முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 போட்டிகள் முடிவு

20 போட்டிகள் முடிவு

ஐபிஎல் 2021 தொடரின் 20 போட்டிகள் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. அடுத்ததாக அணி வீரர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத்திற்கு சென்று அடுத்தகட்ட போட்டிகளில் விளையாடவுள்ளனர். இந்த சீசனில் பயோ பபுள், அதிகமான கொரோனா பரவல் உள்ளிட்டவை அணி வீரர்களின் மனதில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

லிவிங்ஸ்டன் விலகல்

லிவிங்ஸ்டன் விலகல்

காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணியிலிருந்து விலகி நாடு திரும்பினார். தொடர்ந்து அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டனும் பயோ பபுள் நெருக்கடியை அளிப்பதாக கூறி நாடு திரும்பியுள்ளார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி

அடுத்தடுத்து அதிர்ச்சி

இந்நிலையில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஐபிஎல் தொடரிலிருந்து இடையில் விலகும் முடிவை அஸ்வின் எடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் இருந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறிள்ளார். இதேபோல ராஜஸ்தான் அணி வீரர் ஆன்ட்ரூ டையும் ஐபிஎல்லில் இருந்து விலகல் முடிவை எடுத்துள்ளார்.

விலகல் முடிவு

விலகல் முடிவு

இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் ஆடம் சம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் சொந்த காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களின் இந்த முடிவுக்கு மதிப்பளிப்பதாகவும் அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஆர்சிபி தெரிவித்துள்ளது.

முடங்கும் ஆபத்து

முடங்கும் ஆபத்து

அதிகமான கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் 30 சதவிகித விமான சேவைகளை ஆஸ்திரேலிய அரசு தடை செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலேயே முடங்கும் ஆபத்தை தவிர்க்கும் வகையில் நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய பௌலர் ஆன்ட்ரூ டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 26, 2021, 12:22 [IST]
Other articles published on Apr 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+