Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு தெரிந்துதான் நடக்கிறதா?.. இந்திய வீரர்களை கிண்டல் செய்த ஆர்சிபி.. பின்னணியில் ஷாக் சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு சென்று இருக்கும் ரோஹித் சர்மா கொரோனா விதிகளை மீறியதாக சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார். இந்த நிலையில் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களை ஆர்சிபி அணி கிண்டல் செய்துள்ளது.

கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த டெஸ்ட் போட்டியில் இவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களா என்பதே தற்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

ஆஸ்திரேலியாவில் இப்படி கொரோனா விதிகளை மீறி இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ரோஹித் சர்மா மீது பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். டெஸ்ட் அணியில் இணைந்த அவர் பொறுப்பாக இல்லாமல் ஊர் சுற்றியதை பலரும் விமர்சனம் செய்துள்ளனர் .

 விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களை ஆர்சிபி அணி கிண்டல் செய்துள்ளது. இந்திய வீரர்கள் டயட்டை மீறி பீப் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டதை ஆர்சிபி கிண்டல் செய்துள்ளது. ஒருநாள் டயட்டை மீறி சாப்பிடலாம் என்றால் நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்று ஆர்சிபி அணி கேள்வி எழுப்பி உள்ளது.

கேள்வி

கேள்வி

அதாவது உங்கள் கோச், ஒருநாள் உங்களுக்கு டயட்டை மீறி சாப்பிட அனுமதித்தால், என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்டுள்ளது. ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களை சீண்டும் வகையில் ஆர்சிபி இந்த கேள்வியை எழுப்பி உள்ளது. ரோஹித் சர்மா ஆகியோர் டயட்டை மீறி சாப்பிட்டதாக கூறி ஆர்சிபி இப்படி கிண்டலாக டிவிட் செய்துள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

ஆர்சிபி அணியின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரோஹித் சர்மா இந்திய வீரர். ஐபிஎல்லின் போது மட்டுமே அவர் மும்பை வீரர். இப்படி இருக்கும் போது இந்திய வீரரை ஒரு ஐபிஎல் அணி கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம். ஐபிஎல் சண்டையை வைத்து பிரிவினை செய்வது எப்படி நியாயம் ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 மோதல்

மோதல்

கோலிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் மோதல் இருப்பதாக ஏற்கனவே இணையத்தில் பலரும் பேசி வருகிறார்கள். இப்படி இருக்கும் போது ஆர்சிபியின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலிக்கு தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா என்று பலரும் இதை கேள்வி எழுப்பி தொடங்கி உள்ளனர்.

Story first published: Sunday, January 3, 2021, 11:46 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+