Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி வேணாம்.. ரோஹித் தான் வேணும்.. உலகக்கோப்பைக்கு முன் கேப்டனை மாத்துங்க.. ரசிகர்கள் அடம்!

Recommended Video

என்ன ஆச்சு பெங்களூரு அணியினருக்கு ? டெல்லியிடமும் தோல்வி

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் கோலியின் தலைமையில் இயங்கும் பெங்களூர் அணி தன் முதல் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த தோல்விகளுக்கு கோலி தன் அணி வீரர்கள் மீது குறை கூறினாலும், மக்கள் கோலியின் கேப்டன்சி மீது தான் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

கோலி மீது விமர்சனம்

கோலி மீது விமர்சனம்

ஐபிஎல் தொடரில் ஆரம்பித்து, இந்த விமர்சனம் இந்திய அணிக்கு தாவி உள்ளது. பலரும் கோலியின் இந்திய அணி கேப்டன்சியும் சரியில்லை. எனவே, அவரை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை இந்திய அணிக்கு கேப்டனாக நியமித்து உலகக்கோப்பை தொடருக்கு அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

நேரம் வந்துவிட்டது

ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் கோலி குறித்து தங்கள் எண்ணங்களை கொட்டி இருக்கிறார்கள். அதில் சில உங்கள் பார்வைக்கு - "உண்மையை சொல்லுவோம். விராட் கேப்டனாக இருக்க தகுதி இல்லாதவர். கேப்டனை மாற்றும் நேரம் வந்துவிட்டது" என நேரடியாக தாக்கியுள்ளார்.

ஏமாற்றிவிடாதீர்கள்”

இங்கே ஒரு பெங்களூர் அணி ரசிகர் கோலியிடம் கெஞ்சுவது போல கலாய்த்துள்ளார். "தயவு செய்து பெங்களூர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகி விடுங்கள். அப்புறம் அந்த அணி வெற்றி பெறும். எங்களை ஏமாற்றிவிடாதீர்கள்"

நான் மட்டும் தானா?

ரோஹித் சர்மா இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கணும்னு நான் மட்டும் தான் நினைக்கிறேனா?

பரிதாபம் வேண்டுமா?

ரோஹித் சர்மா 136 ரன்கள் இலக்கை வைத்து வெற்றி பெற்றுள்ளார். ஆனால், ஒரு கேப்டன் 210+ ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்துள்ளார். அவர் ரசிகர்கள் அவருக்கு பரிதாபம் தேடித் தர நினைக்கிறார்கள்

குறைந்தபட்ச நம்பிக்கை

விராட் கோலி உடனே இந்திய அணியின் கேப்டன் பதவியை துறக்க வேண்டும். குறைந்தபட்சம் உலகக்கோப்பை குறித்த நம்பிக்கையாவது ஏற்படும். ரோஹித் சர்மா கேப்டனாக உலகக்கோப்பையில் அணியை வழி நடத்த வேண்டும்

Story first published: Sunday, April 7, 2019, 23:08 [IST]
Other articles published on Apr 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+