Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட கருணை காட்டாம இப்படி பண்றீங்களே? தினேஷ் கார்த்திக்கை படுத்திய கோலி - டி வில்லியர்ஸ்!

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது பெங்களூர் அணி. அந்த அணி தன் முதல் நான்கு போட்டிகளை தோற்று இருந்ததால், வெற்றி பெற்று தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

1
45773
அருமையான துவக்கம்

அருமையான துவக்கம்

இந்நிலையில், பார்த்திவ் பட்டேல் - கோலி அருமையான துவக்கம் அளித்தனர். பார்த்திவ் 25 ரன்களில் வெளியேறினார். அதன் பின் கோலி - டி வில்லியர்ஸ் இணைந்து அதிரடி காட்டினர். சிக்ஸ், ஃபோர்களாக ரன் குவித்து கொல்கத்தாவை திணறவிட்டனர்.

புரட்டி எடுத்த கோலி - டி வில்லியர்ஸ்

புரட்டி எடுத்த கோலி - டி வில்லியர்ஸ்

இவர்கள் இருவரும் சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் சராசரியாக எட்டு ரன்கள் எடுத்தனர். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தனர். அவர்கள் பந்துவீச்சில் ஓவருக்கு சராசரியாக 14 முதல் 16 ரன்கள் வரை குவித்தனர்.

Virat Kohli: மரண மாஸ்..! 20 ஓவர் போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய சாதனை

தினேஷ் எடுத்த முடிவு

தினேஷ் எடுத்த முடிவு

இதனால், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தன் அணியில் இருந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், பியுஷ் சாவ்லா மற்றும் குல்தீப் யாதவ்வுக்கு அவர்களின் நான்கு ஓவர்களை முழுமையாக வீச வாய்ப்பளித்தார். நிதிஷ் ராணாவை பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக 2 ஓவர்களுக்கு பயன்படுத்தினார்.

வேகப் பந்துவீச்சாளர்கள் நிலை

வேகப் பந்துவீச்சாளர்கள் நிலை

வேகப் பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா, பெர்குசன், ரஸ்ஸல் என மூன்று வீரர்களின் ஓவர்களிலும் ரன் மழை பொழிந்தனர் கோலி - டி வில்லியர்ஸ். அதனால், இவர்கள் மூவருமே தங்கள் நான்கு ஓவர்களை முழுமையாக வீசவில்லை.

ஏழு பந்துவீச்சாளர்கள்

ஏழு பந்துவீச்சாளர்கள்

கோலி 49 பந்துகளில் 84 ரன்களும், டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதனால், தினேஷ் கார்த்திக் ஏழு பந்துவீச்சாளர்கள் வரை பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்.

விக்கெட் விழவில்லை

விக்கெட் விழவில்லை

மேலும், 8வது ஓவரில் இருந்து 18வது ஓவர் வரை விக்கெட்டே விழவில்லை. இந்த இடைவெளியில் தான் கோலி - டி வில்லியர்ஸ் கூட்டணி அமைத்து 100 ரன்களுக்கும் மேல் குவித்தனர். பந்துவீச்சில் அனைவரையும் பயன்படுத்தி, இதற்கு மேல் வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் தினேஷ் கார்த்திக் காணப்பட்டார்.

Story first published: Friday, April 5, 2019, 22:38 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+