Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மத்தவங்களை நம்பி அடி வாங்குனது போதும்.. “நமக்கு நாமே” என்ற முடிவுக்கு வந்த கோலி - டி வில்லியர்ஸ்!!

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் படு மோசமாக தொடரை துவக்கிய அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான்.

இந்த நிலையில், நான்கு தோல்விகளுக்கு பின் ஐந்தாவது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.

1
45773
பெங்களூர் 205 ரன்கள்

பெங்களூர் 205 ரன்கள்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் கோலி - டி வில்லியர்ஸ் இணைந்து ஆடிய அதிரடி ஆட்டத்தில் அந்த அணி 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது.

கொஞ்சம் கூட கருணை காட்டாம இப்படி பண்றீங்களே? தினேஷ் கார்த்திக்கை படுத்திய கோலி - டி வில்லியர்ஸ்!

கோலி - வில்லியர்ஸ் அதிரடி

கோலி - வில்லியர்ஸ் அதிரடி

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதில் 9 ஃபோர், 2 சிக்ஸ் அடங்கும். அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் 5 ஃபோர், 4 சிக்ஸ் அடங்கும்.

பேட்டிங்கில் கவனம்

பேட்டிங்கில் கவனம்

பெங்களூர் அணி ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங்கில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி தன் முதல் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. இதனால், பேட்டிங்கில் எந்த வகையிலும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என முடிவெடுத்து, சிறந்த பேட்ஸ்மேன்களான கோலி - டி வில்லியர்ஸ் இருவருமே பேட்டிங்கை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.

உண்மையான பலவீனம்

உண்மையான பலவீனம்

எனினும், பெங்களூர் அணியின் உண்மையான பலவீனம் பந்துவீச்சு தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அதை நிரப்ப டிம் சௌதி மற்றும் சாஹலை ஒரே போட்டியில் களமிறக்கியது பெங்களூர் அணி. ஆனால், இதே போட்டியில் சிராஜ், சைனி, ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் ரன்களை வாரி இறைத்தனர்.

பேட்டிங் மட்டும் போதுமா?

பேட்டிங் மட்டும் போதுமா?

கோலி - டி வில்லியர்ஸ் என்ற இரண்டு ஜாம்பவான்கள் இருப்பதால் பேட்டிங்கை தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். ஆனால், பந்துவீச்சில் அப்படி யாரும் இல்லை. சாஹல் மட்டுமே தனியாக போராடி வருகிறார். கொல்கத்தா போட்டியில் கூட 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து 94 ரன்களை எட்டி இருந்தது.

Story first published: Friday, April 5, 2019, 23:04 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+