Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. பும்ராவை சமாளிக்க “நிழலை” கூட்டிட்டு வந்து பயிற்சி செய்யும் பெங்களூர்!

பெங்களூரு : 2019 ஐபிஎல் தொடரை படு தோல்வியுடன் துவக்கிய பெங்களூர் அணி தன் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் போட்டியில் காயமடைந்த பும்ரா இரண்டாவது போட்டியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. எனவே அவரை சமாளிக்க பெங்களூர் அணி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

காபி - பேஸ்ட் பும்ரா

காபி - பேஸ்ட் பும்ரா

பும்ரா போலவே பந்து வீசும் மகேஷ் குமார் என்ற 22 வயது உள்ளூர் கிரிக்கெட் வீரரை அழைத்து வந்து பும்ரா பந்து வீசும் முறையில் பந்து வீசச் செய்துள்ளனர். பும்ரா ஓடி வந்து பந்து வீசும் முறை தனித்துவமானது. அதை அப்படியே "காபி - பேஸ்ட்" செய்தார் மகேஷ் குமார்.

யார்க்கர்

குறிப்பாக பும்ராவின் யார்க்கர்கள் எந்த பேட்ஸ்மேனுக்கும் சந்திக்க கடினமானதாக இருக்கும் என்பதால், மகேஷ் குமாரை அதிக யார்க்கர் பந்துகளை வீசச் செய்து பயிற்சி மேற்கொண்டனர் பெங்களூர் பேட்ஸ்மேன்கள்.

பயிற்சி வீடியோ

பயிற்சி வீடியோ

பெங்களூர் அணியின் பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியான போது, பலரும் பும்ரா ஏன் பெங்களூர் அணிக்கு பந்து வீசி வருகிறார் என கேட்டனர். பின்னர் இது வேறு ஒருவர் என்பதை அறிந்தனர். இந்த பயிற்சி வீடியோ வெளியான சில மணி நேரங்களில் பும்ராவின் நிழல் வீரரான மகேஷ் குமார் யார் என அனைவரும் கேட்கத் துவங்கி விட்டனர்.

மகேஷ் குமார் யார்?

மகேஷ் குமார் யார்?

மகேஷ் குமார் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இன்னும் கிரிக்கெட்டில் பல படிகள் முன்னேற வேண்டிய நிலையில் இருக்கும் மகேஷ் குமார், பும்ராவின் பந்துவீச்சை ஆச்சு பிசகாமல் வீசுவதில் தன் திறமையை வளர்த்துக் கொண்டு அதை வைத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

Story first published: Thursday, March 28, 2019, 16:37 [IST]
Other articles published on Mar 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+