Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க எல்லாம் அம்பயரா..? கண்ணை திறந்து பாருங்க... விளாசி தள்ளிய விராட் கோலி

Recommended Video

IPL 2019: Malinga No ball | பொங்கிய கோஹ்லி.. வருத்தம் தெரிவித்த ரோஹித்- வீடியோ

பெங்களூரு:ஐபிஎல் போட்டியில் நடுவர்களாக இருப்பவர்கள் கண்ணை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி, 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் கடைசி பந்து... போட்டி முடிவையே மாற்றிவிட்டது.

5 பந்துகளில் 10 ரன்கள்

5 பந்துகளில் 10 ரன்கள்

கடைசி ஓவரில் பெங்களூரு அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால், 5 பந்துகளில் 10 ரன்களை டுபே, டி வில்லியர்ஸ் ஜோடி சேர்த்துவிட்டது. கடைசி பந்தை மலிங்கா வீச அதை டுபே அடிக்கமுடியாமல் போனதால் பெங்களூரு தோற்றது.

பெரிய திரை

பெரிய திரை

போட்டி முடிந்த சில நிமிடங்களில் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் மலிங்கா பந்துவீசுவது ரீப்ளை செய்து காண்பிக்கப்பட்டது. அதில் மலிங்கா நோபால் போட்டிருப்பது நன்றாக தெரிய... வெடித்தது சர்ச்சை.

எதிர்பார்த்த ரசிகர்கள்

எதிர்பார்த்த ரசிகர்கள்

அதை பார்த்த நடுவர்கள், மீண்டும் விளையாட வீரர்களை அழைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களோ போட்டி முடிந்தவுடன் சென்றுவிட்டனர். நோபாலாக அறிவித்து ப்ரீஹிட் கொடுத்திருந்தால், முடிவே மாறியிருக்கும்.

உயர்தர ஐபிஎல்

உயர்தர ஐபிஎல்

போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த கோலி கோபத்துடன் பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:நாங்கள் உயர்தரமான ஐபிஎல் போட்டியை சர்வதேச அளவில் விளையாடுகிறோம், கிளப் லெவலில் விளையாடவில்லை.

கண்களை திறங்கள்

கண்களை திறங்கள்

நடுவர்கள் கண்களை திறந்து வைத்து கொண்டு கண்காணிக்க வேண்டும். மலிங்கா வீசியது எவ்வளவு பெரிய நோபால், அதை கவனிக்காமல் இருந்துள்ளனர். நடுவர்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

Story first published: Friday, March 29, 2019, 12:08 [IST]
Other articles published on Mar 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+