For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழக வீரரின் பந்தில் ஐபிஎல் தொடரின் மிகப் பெரிய சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக்.. கொண்டாடிய ரசிகர்கள்

பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் சீசனின் மிகப் நீளமான சிக்ஸரை அடித்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய இந்தப் போட்டி டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளாசன் 106 மீட்டர் சிக்ஸ் அடித்தார். அதுவே 2024 ஐபிஎல் தொடரின் மிகப் நீளமான சிக்ஸராக இருந்தது.

RCB vs SRH Dinesh Karthik hit 108 meters longest six in IPL 2024

அடுத்த சில மணி நேரங்களில் தினேஷ் கார்த்திக் அந்த சாதனையை முறியடித்தார். சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் பந்தில் தினேஷ் கார்த்திக் 108 மீட்டருக்கு பெரிய சிக்ஸ் அடித்தார். அந்த பந்து மைதானத்தின் கூரையை தொட்டு விட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து விழுந்தது.

இதை அடுத்து ஒரே போட்டியில் மிக நீளமான சிக்ஸர் சாதனையை முறியடித்தார் தினேஷ் கார்த்திக். அவர் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்கள் அடித்து இருந்தன.

மேலும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தது. இதுவே ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய ஸ்கோர் ஆகும். அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்து ஆடிய பெங்களூரு அணி 262 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Monday, April 15, 2024, 23:28 [IST]
Other articles published on Apr 15, 2024
English summary
RCB vs SRH : Dinesh Karthik hit 108 meters longest six in IPL 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+