For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரித்து மேய்ந்த டி.வில்லியர்ஸ் 82, கோஹ்லி 75...பெங்களூர் அபார வெற்றி !

By Karthikeyan

பெங்களூரு: ஐபிஎல் 9 வது சீசனின் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல் சீசனில் 4 வது நடந்த லீக் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் டாசில் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

RCB Vs SRH played at Bangalore

இதையடுத்து பெங்களுரூ அணிக்கு கேப்டன் விராட் கோஹ்லியும், அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலும் துவக்கம் தந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் புவனேஷ்குமார் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 4 பந்துகளை சந்தித்த கெயில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

பின்னர் கோஹ்லியுடன் இணைந்தார் தென் ஆப்பிரிக்காவின் டி.வில்லியர்ஸ். மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆஷிஸ் நெஹ்ரா வீசிய 4-வது ஓவரில் டி.வில்லியர்ஸ் அதிரடியாக 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசினார். இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடியாக அடித்து ஆட, பெங்களூருவின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 88 ரன்கள் குவித்தது.

டி.வில்லியர்ஸ் தான் சந்தித்த 26-வது பந்தில் அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் சர்மா வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அரை சதம் கடந்தார் கேப்டன் கோஹ்லி இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 157 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கோஹ்லி புவனேஷ்குமார் பந்தில் 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 3 சிக்ஸர்களையும் 7 பவுண்டரிகளையும் விளாசினார்.

இதையடுத்து ராகுல் சர்மா வீசிய 17-வது ஓவரில் வாண வேடிக்கை காட்டிய வாட்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதனிடையே சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி.வில்லியர்ஸ் 82 ரன்களில் வீழ்ந்தார். 42 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் விளாசினார். டி.வில்லியர்ஸை தொடர்ந்து அடுத்த பந்திலேயே பெவிலியன் திரும்பினார் வாட்சன். இருவரது விக்கெட்களையும் முஸ்திபூர் ரஹ்மான் வீழ்த்தினார்.

Bangalore wins by 45 runs.

அடுத்து வந்த இளம் சிங்கம் 18 வயதே நிரம்பிய சப்ராஸ் கான் வெளுத்து வாங்கினார். புவனேஸ்குமார் வீசிய 19-வது ஓவரில் மட்டும் அவர் 22 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. சப்ராஸ் கான் 10 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். அவர் 5 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் விளாசினார்.

பெங்களூரை தொடர்ந்து கடின இலக்கை விரட்டி களம் இறங்கிய சன்ரைசஸ் அணிக்கு தவான் (8) ஏமாற்றினார். வார்னர் மட்டும் சற்று ஆறுதலாக 25 பந்தில் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஓஜா (0), ஹென்ரிக்ஸ் (6), ஹூடா (6), என ஹைதரபாத் வீரர்களின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. இதனால் சன்ரைசஸ் தோல்வி உறுதியானது.

சற்று தாக்குப்பிடித்த ஆஷிஸ் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். மார்கன் (22), கரண் சர்மா (25) அவுட் ஆகாமல் இருந்தனர். இறுதி வரை வெற்றிக்காக போராடிய போதும் ஹைதராபாத் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடி 82 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றது.

Story first published: Wednesday, April 13, 2016, 9:01 [IST]
Other articles published on Apr 13, 2016
English summary
IPL 2016: AB de Villiers, Virat Kohli dazzle as RCB thrash SRH
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+