Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்

பெங்களூரு : சன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 2024 ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் படுமோசமாக பந்து வீசினார்கள். இதை அடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்தனர்.

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மோசமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசியதை கண்ட விராட் கோலி ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே திட்டித் தீர்த்தார். அவர் பல முறை தாங்க முடியாத கோபத்தில் கத்திய காட்சிகளை தொகுத்து, "எப்படிப்பட்ட வீரரை இப்படி கத்த வைத்து விட்டார்கள்?" என கோலி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

RCB vs SRH Virat Kohli unhappy with Royal Challengers Bengaluru bowlers

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் துவக்க ஜோடியான அபிஷேக் சர்மா - ட்ராவிஸ் ஹெட் முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தனர். இந்த கூட்டணியில் அபிஷேக் சர்மா வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். 8.1 ஓவர்களில் எல்லாம் 108 ரன்களை தொட்ட ஹைதராபாத் அணி, அடுத்து கிளாசன் - ட்ராவிஸ் ஹெட் ஜோடியின் அதிரடியால் மேலும் ரன் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் எல்லாம் சதம் அடித்தார். கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.

இப்படி ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், விக்கெட் வீழ்த்த எந்த திட்டமும் இல்லாத பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தவறான இடத்தில் பந்தை வீசி பவுண்டரி அடிக்க வழி ஏற்படுத்தித் தந்தனர். அதைக் கண்ட விராட் கோலி அவர்களை திட்டிக் கொண்டு இருந்தார்.

ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்த நிலையில் அடுத்து சேஸிங் செய்த பெங்களூரு அணியும் பேட்டிங்கில் கலக்கியது. அந்த அணி 262 ரன்கள் குவித்தது. நன்றாக பேட்டிங் செய்த போதும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூரு அணியின் பேட்டிங்கில் விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். கேப்டன் டு பிளேசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார்.

Story first published: Tuesday, April 16, 2024, 8:57 [IST]
Other articles published on Apr 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+