Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு மட்டும் ஓபனிங் ஆடினா ஆர்சிபி வேற லெவலுக்கு போயிடும்... வாகன் பாராட்டு

லண்டன் : கடந்த இந்தியா -இங்கிலாந்து இடையிலான டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி விளையாடினார்.

அவர் தொடர்ந்து துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல்லில் மட்டுமே அவர் துவக்க வீரராக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விராட் துவக்க வீரராக களமிறங்கினால் ஆர்சிபி வேறு லெவலுக்கு சென்றுவிடும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

துவக்க வீரராக விளையாடிய கோலி

துவக்க வீரராக விளையாடிய கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டி20 தொடரின் 5வது மற்றும் இறுதிப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக ரோகித்துடன் களமிறங்கி விளையாடினார். துவக்க வீரராக விளையாடியதுடன் அவுட்டாகாமல் 80 ரன்களையும் குவித்த அவர் அணியின் வெற்றிக்கும் சிறப்பாக உதவினார்.

சிறப்பான மிடில் ஆர்டர்

சிறப்பான மிடில் ஆர்டர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக உள்ளதால் தான் துவக்க வீரராக விளையாடவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஐபிஎல்லில் துவக்க வீரராக ஆட்டம்

ஐபிஎல்லில் துவக்க வீரராக ஆட்டம்

இந்நிலையில் நாளை முதல் துவங்கவுள்ள ஒருநாள் தொடரில் அவர் துவக்க வீரராக விளையாடுவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தான் நாளைய ஆட்டத்தில் துவக்க வீரராக விளையாட மாட்டேன் என்றும் ரோகித் மற்றும் ஷிகர் தவான் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் துவக்க வீரராக விளையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி வலிமையாகும்

ஆர்சிபி வலிமையாகும்

இந்நிலையில் விராட் கோலி எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பாக விளையாடுவார் என்றும் ஆனால் ஐபிஎல்லில் அவர் துவக்க வீரராக விளையாடினால் ஆர்சிபி வலிமையாகும் என்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இவ்வாறு விளையாடுவதன்மூலம் அவர் அதிக உற்சாகமடைவார் என்றும் வரும் மாதங்களில் சிறப்பான ஷாட்களை அவரிடம் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, March 22, 2021, 18:09 [IST]
Other articles published on Mar 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+